ராஜேஸ், கொழும்பு
2018 மலர்ந்த போது இப்படி ஒரு அதிசயம் நடக்குமென்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. இலங்கை சினிமா துளிர் விடுகிறது என்று சினிமானந்தா பதில்களில் அடிக்கடி எழுதியிருந்தோம். ஆனால் அது வடக்கு பிராந்தியத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருந்தது.
வடக்கில் மாதம் ஒரு படம் திரையிடப்படுகிறது. அதில் லாபமோ, நாட்டமோ தெரியவில்லை. ஆனால், ஒரு திரையரங்கில் மூன்று காட்சிகளுடன் பெரும்பாலும் ஒரு படம் முடிந்து விடுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் பெரிதும் பாராட்டுக்குரியவை. தலைநகரான கொழும்பிலும் நாட்டின் மலையகம் மற்றும் ஏனைய பகுதிகளில் இப்படங்கள் ஏன் திரையிடப்படுவதில்லை என்று தெரியவில்லை.
இலங்கை தமிழ் படங்கள் திரையிடப்படுவதற்கென்றே ஒரு திரையரங்கை கொழும்பில் நிரந்தரமாக வைக்கவேண்டும் என்று இதே பகுதியில் எழுதியிருக்கிறோம்.
இப்போது அடுத்தடுத்த மாதங்களில் கோமாளி கிங்ஸ் இதுகாலம் என்று வெளிவந்து மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இருட்டு மறைந்து பொழுது விடிந்துவிட்ட நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்று தெரியுமா?
குறிப்பிட்ட ‘கோமாளி கிங்ஸ்’ , ‘இது காலம்’ ஆகிய இரு படங்களும் மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டவை. அப்போது இருந்த TREND வேறு. இப்போது நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் திரைக்கதைகளை தட்டச்சு செய்து அழகாக பைண்ட் செய்து வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களைத் தேடியலைகின்றனர். இவர்களில் அநேகமானோர் திறமைசாலிகள்.
தென்னிந்திய தமிழ்ச் சினிமாவில் இப்போது மறுமலர்ச்சியை ஏற்படுத்திவரும் இளைய தலைமுறை இயக்குனர்களுடன் போட்டி போடக்கூடியவர்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு கை கொடுப்பார்களா? அவர்களது திறமைகளை அங்கீகரிப்பார்களா என்பது தான் இப்போது கேள்வியாக உள்ளது.
தென்னிந்திய தமிழ்ப்படங்களே இங்கு மூன்றாவது வாரத்தை எட்டுவதற்கு சிரமப்படும் நிலையில் ‘கோமாளி கிங்ஸ்’ ஒரு மாதத்தை கடத்திருக்கும் இந்த நேரத்தில், இலங்கையில் அதிக வசூலை பெற்ற இலங்கை தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே!
தென்னிந்திய தமிழ்சினிமா இப்போது பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. இனிமேல் அங்கு சிறிய படங்கள் ஒடுவது பெருஞ் சிரமம். சில புதிய இயக்குனர்கள் திரையரங்குகளை நம்பாமல் NETFIXக்கு மாறியுள்ளனர். அபோபோல் இலங்கையின் எதிர்கால தமிழ்பட இயக்குனர்கள் தென்னிந்திய சினிமா பாணியை பின்பற்றாமல் வேறு வழிகளில் சிந்திப்பார்களேயானால் வெற்றி பெறலாம்.
இதேநேரம் இப்போதைக்கு இல்லையென்றால் இலங்கை தமிழ்சினிமா எதிர்காலத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடும்.
திரைப்படங்களின் வெளியீடு விநியோகம் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்குவித்தல் ஆகியவையே முக்கியமாகும். இதர பிரச்சினைகள் இருந்தாலும் இந்த முக்கிய பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் குழுவொன்றை அமைத்து இயங்குவது நல்லது.
அவர் தயார்தான். ஆனால் அதில் ஒரு சிக்கல், மலையாளத்தில் உருவாகும் ஒரு அடார் லவ் என்ற படத்தில் கண்சிமிட்டியும் விரல்களால் துப்பாக்கி சூடு நடத்தியும் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர்.
அவரை தெலுங்கு படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். அதேவேளை ஹிந்தியில் தீபிகா படுகோனின் காதலர் ரன்வீர் சிங்சின் ஜோடியாக ‘சிம்பா’ படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபா சம்பளத்துடன் அவரை கேட்டுள்ளனர். அவரும் சம்மதம் சொல்லி விட்டார். ஆனால் ‘ஒரு அடார் லவ்’ வெளியிடப்படும் வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் தவிப்பில் இருக்கிறார் பிரியா.
ஒரு அடார் லவ்’ வெளியிடப்பட்டால் தான் அவருக்கு விடுதலை!
இந்திய சினிமாவில் என்ன புதுசு?
ஜானகி , பதுளை
ஹொலிவூட்டின் புகழ்பெற்ற டைரக்டர் கிறிஸ்தோபர் நோலன் சமீபத்தில் இந்தியா வந்ததுதான் இப்போதைய பேசுபொருள். இன்செப்சன், மெமன்டோ,டன்கர்க் ஆகிய படங்களை இயக்கி பெயர் பெற்ற இவர் ‘டிஜிட்டல் மயத்தில் சினிமாவின் எதிர்காலம்’ என்ற கருத்தரங்கில் பங்குபற்ற மும்பாய் வந்திருக்கிறார்.
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், அமீர்கான்,ஷாருக்கான், இயக்குனர்கள், மணிரத்தம், அனுராக் சாஷியப் ஆகியோரும் இந்த கருத்தரங்கில் பங்குபற்றுகின்றனர்.

இலங்கை தமிழ் படத்துறையில் முன்னர் கலைஞர்களிடையே இருந்த பொறாமை காலை வாரி விடுவதல் என்பன பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டது. இனிமேல் அவ்வாறு ஏற்படாமல் இருப்பதை இப்போதே உறுதி செய்து கொண்டால்தான் எதிர்காலம் சிறக்கும்.
கண் சிமிட்டி நடிகை பிரியா வாரியர் ஹிந்திக்கு போய் விட்டாரா?
ஜான்ஸிராணி, வவுனியா