என்னைப் பற்றி

 

மணி ஸ்ரீகாந்தன் எனும் நான், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருகின்றேன்.
இலங்கையில் வெளியாகும் தேசிய நாளேடுகள், மற்றும் சஞ்சிகைகளிலும் இன்று வரை எனது எழுத்துப் பணி தொடர்ந்து கொண்டே வருகிறது.
இதேவேளை, தமிழக செய்தி தொலைக்காட்சிகள் சிலவற்றுக்கான  கொழும்பு செய்தியாளராகவும் பணியாற்றுகின்றேன்.


மணி என்ற பெயரில் சிரிப்பு ஓவியங்களை தமிழகத்திலும், மற்றும் இலங்கையிலும் வெளியாகும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் படைத்து வருகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 'தமிழ் வம்பன்' என்ற பெயரில் இயங்கி வந்த எனது வலைப்பூ தளம் இன்றிலிருந்து புதுப்பொழிவுடன் மணி விகடன் என்ற பெயரில் மறுமலர்ச்சி காண்கிறது.

'மணி விகடன்' என்ற பெயரில் இயங்கும் எனது வலைத்தளத்தில் எனது படைப்புகளோடு, நான் படித்து சுவைத்த சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் துணுக்குகள்,மீம்ஸ்கள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து பதிவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.


எனது யூடியுப் சேனலான (puthiya vaanam tv)‘புதிய வானம்’ வலைக்காட்சியிலும் எனது படைப்புகளை நீங்கள் காணலாம்.
mani srikanthan cartoonist என்ற பெயரில் இயங்கும் எனது முகநூல் கணக்கோடு விருப்பமானவர்கள் இணைந்து கொள்ளலாம்.
எனது படைப்புகளை படிப்பவர்கள், தயவு கூர்ந்து தங்களின் விமர்சனங்களையும் முன்வைத்தால் மிகவும் மகிழ்வேன்.
என்னோடு தொடர்பு கொள்வதற்கு 0094779614611 என்ற இலக்கத்துடனும், manisrikanthan@gmail.com என்ற இமெயில் ஊடாகவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
நன்றி.
 

No comments:

Post a Comment