முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை
கேட்டு எழுதுபவர் - மணி ஸ்ரீகாந்தன்.
இரத்தினபுரி, கலவானை தோட்டத்தில் முத்துராஜா கங்காணியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும், கங்காணியாக பல ஆண்டுகள் வேலை பார்த்து, வயது முதிர்ந்த நிலையில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, இரத்தினபுரி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் ஒரு மூலையில் முடங்கி கிடந்தவர் அன்று அநாதரவாக இறந்து போனார்.
தாரை தப்பட்டைகள் வானை பிளக்க அந்த சவ ஊர்வலம் ஆரவாரத்துடன் சென்றுக்கொண்டிருந்தது. ஊரின் முச்சந்தியில் பிரேத பெட்டியை திருப்பினார்கள். அப்படி திருப்பும் போது அந்த இடத்தில் இறந்து போனவர் விரும்பி சாப்பிடும் உணவு பண்டங்களோடு, அவருக்கு பிடித்த சாராயம் ஒரு போத்தலும் அங்கே படையல் போட்டு வைக்கப்பட்டது. முச்சந்தியில் அப்படி பிரேத பெட்டியை சுற்றி,படையல் போடுவதை பாடை மாற்றி என்று அழைப்பார்கள். குறிப்பாக பாடை மாற்றியில்தான் பேய்கள் குடியிருக்கும் என்பது சில பழமைவாதிகளின் நம்பிக்கை. ஆனாலும் இன்று இருக்கும் சில முற்போக்கான இளைஞர்களில் சிலர் அந்த படையலையும் ருசித்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கங்காணியின் பிரேதம் சுடுகாட்டில் வைக்கப்பட்டு, கடைசியாக செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்து சவம் புதைக்கப்பட்டபின் அனைவரும் வீடு நோக்கி நடந்தார்கள். ஆனால் மாயவன் மட்டும் ஒரு திட்டத்தோடு அந்தக் கூட்டத்தில் கடைசி நபராக பின்னால் மெதுவாக நடந்தான். மாயவன் ஏதோ திட்டம் போடுகிறான் என்பதை புரிந்து கொண்ட அவனின் நண்பன் ருவான்னும் அவனோடு இணைந்து கொண்டான்.
அப்போது நேரம் மாலை ஆறு மணியிருக்கும். அது ஒரு மழைக்காலம் என்பதால் கருமையான இருள் அந்த பகுதியை கபளீகரம் செய்து கொண்டிருந்தது. தோட்ட மக்கள் அனைவரும் மயானத்தை விட்டு சென்ற பிறகு அந்த இடத்தில் ஒரு பூரண அமைதி நிலவியது.
மயானத்திற்கும் முச்சந்திக்கும் இடையே சில அடிகள் தூரம் என்பதால், அந்த படையல் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகவே தெரிந்தது. அந்த படையலின் ஓரத்தில் ஒரு போத்தலில் பளபளத்துக்கொண்டிருந்த அந்த சாராயம் மாயவனின் கண்களை உறுத்தியது.
மாயவன் ஒரு முடா குடிக்காரன் அவன் கண்ணெதிரே சாராயம் இருக்கும்போது அதனை விட்டு வைப்பானா? தனது எண்ணத்தை தன் நண்பன் ருவானிடம் சொன்னப்போது அவன் பதறினான். “டேய் வேணாம்டா! அது செத்துப்போன ஆத்துமாவுக்கு படைத்தது. அதை நீ குடிச்சா அந்த ஆத்துமா உன்னை பிடிச்சுக்கும்” என்று அவன் சொன்னதை கேட்ட மாயவன் பலமாக சிரித்துவிட்டு “டேய் அந்த அநாதை கிழவனுக்கு நம்மள பிடிக்கிற தைரியம் இருக்குமாடா! நீ வேடிக்கையை மட்டும் பாரு.” என்று சொன்னவன் அந்த முச்சத்தியில் படையலுக்கு முன்பாக சம்மனம் போட்டு அமர்ந்தவன். முதலில் அந்த சாராயத்தை எடுத்து ஒரே மூச்சில் குடித்தான். அதன் பிறகு அந்த படையலில் இருந்த சோற்றை கோழிக்குழம்போடு பிசைந்து சப்புக்கொட்டி சாப்பிட்டான்.
அப்போது அவனுக்கு பின்னால் இன்னொரு மனிதரும் சப்புக்கொட்டும் ஓசை அவன் காதுகளுக்கு கேட்டப்போது, ருவானை நிமிர்ந்து பார்த்தவன் “ என்னடா ஆசையா இருக்கா இப்படி உனக்கு எச்சி ஊருதே! வந்து எடுத்து சாப்பிடு” என்று சொன்னவனின்
பேச்சை ருவான் கண்டுக்கொள்ளாததால் மாயவன் சில நிமிடங்களிலேயே அந்த படையலில் உள்ள அனைத்தையும் தின்று முடித்து தனது கையையும் நாவால் நக்கினான்.
அந்த காட்சியை பார்த்து வெறுப்படைந்த ருவான் “நீ மெதுவா வாடா நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தான்.
குடிபோதை தலைக்கு ஏறியதால் கொஞ்சம் தள்ளாடியபடியே மாயவன் நடந்தான். அப்போது அந்த சுடுகாட்டின் ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் பெருமூச்சு விடுவதுபோல் ஒரு அசசீரியை மாயவன் உணர்ந்தான். போதையிலும் அவனுக்கு உடல் சில்லிட்டுப்போனது.
ருவான் பாதையில் எங்காவது நிற்கிறானா, என்பதை கூர்ந்து பார்த்தான் அவன் நிற்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
‘இப்படி என்னை தனியே விட்டுட்டு போயிட்டானே பாவி’ன்னு மனதுக்குள் திட்டியவன் மூணு முறை சுடலையைப் பார்த்து காரி துப்பியவன் தைரியமாக நடந்தான்.
வீட்டுக்கு வந்த மாயவன் களைத்து போனவனாக பாயில் சுருண்டு படுத்தான். அடுத்த நாள் மயவனை குளிர் காய்ச்சல் பிடித்தாட்டியது. அதோடு அவன் பித்து பிடித்தவன் மாதிரி வாய்க்கு வந்த தகாத வார்த்தைகளால் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான்.
மாயவனுக்கு பேய் பிடித்துவிட்டது என்ற செய்தி கலவானை பகுதி முழுவதும் காட்டுத் தீப்போல பற்றிக்கொண்டது. மாயவனுக்கு எப்படி பேய் பிடித்தது என்ற காரணத்தை அறிந்த ருவான் ‘உன் திமிருக்கு நல்லா வேணும்டா!’னு மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
சில நாட்கள் கழித்தும் மாயவன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாததால் அவனுக்கு பேய் விரட்ட முடிவு செய்த அவன் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் முத்து பூசாரியை அழைத்து வந்தார்கள்.
முத்து பூசைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தவர் பூஜை மன்றில் அமர்ந்து உடுக்கையை எடுத்து பலமாக தனது கரகரத்த குரலில் பாட ஆரம்பித்தார். அப்போது முத்துவின் ஞானக்கண்ணில் மாயவனோடு அன்று சுடுகாட்டில் இருந்த ஒருவனை பற்றி அவர் புரிந்து கொண்டார். அடுத்த நிமிடம் முத்து ‘மாயவனின் நண்பனுக்கு எல்லாம் தெரியும் அவனை முதலில் அழையுங்கள்’ என்று கட்டளையிட கூட்டத்தில் வியர்த்துபோயிருந்த ருவான் முத்துவின் முன்பாக வந்து அன்று நடந்த விடங்களை ஒன்றுவிடாமல் அப்படியே சொன்னான்.
விசயத்தை முழுதாக கேட்டு தெரிந்து கொண்ட முத்துவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. அடுத்த நிமிசமே முத்து அருள் வந்து ஆட தொடங்கினார். அவரின் மந்திர வித்தைகளை தாக்குபிடிக்க முடியாத அந்த தீய சக்தி முத்துவின் முன்னால் மண்டியிட்டு பணிந்தது.
நீ வந்த காரணத்தை சொல்லுன்னு பூசாரி சாட்டையை சுழற்றியபோது பயந்துபோன அந்த தீய சக்தி “அய்யோ பூசாரி தயவு செய்து என்னை அடிச்சிடாதீங்க. உங்க அடியை தாங்குகிற வலிமை எனக்கு கிடையாது.அனாதரவாக சாப்பாடில்லாமல் செத்துப்போன எனக்கு அன்னைக்குதான் நல்ல சாப்பாட்டை படையல் போட்டு வைத்தாங்க. எல்லோரும் போன பிறகு சாப்பிடலாம்னு காத்திருந்தேன். அப்போதான் இந்த சண்டாளன் மிச்சமீதி வைக்காம தின்னுட்டு போயிட்டான். அந்தக் கோவத்துலதான் அவன் மேல உட்கார்ந்துட்டேன். இனி இந்த பக்கமே வர மாட்டேன். ஆனா நான் ஒரு மூணு கறியோட ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருசமாயிடுச்சு அதனால எனக்கு கோழிக் கறியோட ஒரு சாப்பாடு மட்டும் தந்திடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்!” என்று அந்த தீய சக்தி கேட்டப்போது மனம் இறங்கிய முத்து அந்த தீய சக்தி கேட்ட மாதிரியே ஒரு சாப்பாட்டை உடனடியாக தயார் செய்து கொடுத்து அதனை ஒரு போத்தலில் பிடித்து அடைத்தார்.
அதன் பிறகு சுடலைக்கு சென்ற அவர் அதற்கான பரிகார பூஜைகளை முடித்தவர். அந்த போத்தலை எரியும் நெருப்பில் போட்டார்.
இப்படி எத்தினையோ தீய சக்திகளின் கதையை முடித்த முத்து பூசாரிக்கு இப்போது நெருப்பில் எரியும் அந்த தீய சக்தியின் மீது ஒரு அனுதாபம் வந்தது.ஏனென்றால் முத்து ஒரு காலத்தில் அந்த முத்துராஜா கங்காணியிடம் வேலை செய்திருக்கிறாராம். ⚫
கேட்டு எழுதுபவர் - மணி ஸ்ரீகாந்தன்.
இரத்தினபுரி, கலவானை தோட்டத்தில் முத்துராஜா கங்காணியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும், கங்காணியாக பல ஆண்டுகள் வேலை பார்த்து, வயது முதிர்ந்த நிலையில் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, இரத்தினபுரி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் ஒரு மூலையில் முடங்கி கிடந்தவர் அன்று அநாதரவாக இறந்து போனார்.
அதை கேள்விப்பட்ட கலவானை தோட்ட இளைஞர்களும், பொது மக்களும் கங்காணியின் உடலை பொறுப்பேற்று ஒரு பொது முற்றத்தில் வைத்து அவருக்கான இறுதி சடங்குகளை செய்து முடித்தார்கள். அதன் பிறகு கங்காணியின் பிரேதத்தை ஊரின் எல்லையில் இருக்கும் மயானத்தை நோக்கி சுமந்து சென்றார்கள்.
தாரை தப்பட்டைகள் வானை பிளக்க அந்த சவ ஊர்வலம் ஆரவாரத்துடன் சென்றுக்கொண்டிருந்தது. ஊரின் முச்சந்தியில் பிரேத பெட்டியை திருப்பினார்கள். அப்படி திருப்பும் போது அந்த இடத்தில் இறந்து போனவர் விரும்பி சாப்பிடும் உணவு பண்டங்களோடு, அவருக்கு பிடித்த சாராயம் ஒரு போத்தலும் அங்கே படையல் போட்டு வைக்கப்பட்டது. முச்சந்தியில் அப்படி பிரேத பெட்டியை சுற்றி,படையல் போடுவதை பாடை மாற்றி என்று அழைப்பார்கள். குறிப்பாக பாடை மாற்றியில்தான் பேய்கள் குடியிருக்கும் என்பது சில பழமைவாதிகளின் நம்பிக்கை. ஆனாலும் இன்று இருக்கும் சில முற்போக்கான இளைஞர்களில் சிலர் அந்த படையலையும் ருசித்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கங்காணியின் பிரேதம் சுடுகாட்டில் வைக்கப்பட்டு, கடைசியாக செய்யப்படும் சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்து சவம் புதைக்கப்பட்டபின் அனைவரும் வீடு நோக்கி நடந்தார்கள். ஆனால் மாயவன் மட்டும் ஒரு திட்டத்தோடு அந்தக் கூட்டத்தில் கடைசி நபராக பின்னால் மெதுவாக நடந்தான். மாயவன் ஏதோ திட்டம் போடுகிறான் என்பதை புரிந்து கொண்ட அவனின் நண்பன் ருவான்னும் அவனோடு இணைந்து கொண்டான்.
அப்போது நேரம் மாலை ஆறு மணியிருக்கும். அது ஒரு மழைக்காலம் என்பதால் கருமையான இருள் அந்த பகுதியை கபளீகரம் செய்து கொண்டிருந்தது. தோட்ட மக்கள் அனைவரும் மயானத்தை விட்டு சென்ற பிறகு அந்த இடத்தில் ஒரு பூரண அமைதி நிலவியது.
மயானத்திற்கும் முச்சந்திக்கும் இடையே சில அடிகள் தூரம் என்பதால், அந்த படையல் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகவே தெரிந்தது. அந்த படையலின் ஓரத்தில் ஒரு போத்தலில் பளபளத்துக்கொண்டிருந்த அந்த சாராயம் மாயவனின் கண்களை உறுத்தியது.
மாயவன் ஒரு முடா குடிக்காரன் அவன் கண்ணெதிரே சாராயம் இருக்கும்போது அதனை விட்டு வைப்பானா? தனது எண்ணத்தை தன் நண்பன் ருவானிடம் சொன்னப்போது அவன் பதறினான். “டேய் வேணாம்டா! அது செத்துப்போன ஆத்துமாவுக்கு படைத்தது. அதை நீ குடிச்சா அந்த ஆத்துமா உன்னை பிடிச்சுக்கும்” என்று அவன் சொன்னதை கேட்ட மாயவன் பலமாக சிரித்துவிட்டு “டேய் அந்த அநாதை கிழவனுக்கு நம்மள பிடிக்கிற தைரியம் இருக்குமாடா! நீ வேடிக்கையை மட்டும் பாரு.” என்று சொன்னவன் அந்த முச்சத்தியில் படையலுக்கு முன்பாக சம்மனம் போட்டு அமர்ந்தவன். முதலில் அந்த சாராயத்தை எடுத்து ஒரே மூச்சில் குடித்தான். அதன் பிறகு அந்த படையலில் இருந்த சோற்றை கோழிக்குழம்போடு பிசைந்து சப்புக்கொட்டி சாப்பிட்டான்.
![]() |
| முத்து பூசாரி |
பேச்சை ருவான் கண்டுக்கொள்ளாததால் மாயவன் சில நிமிடங்களிலேயே அந்த படையலில் உள்ள அனைத்தையும் தின்று முடித்து தனது கையையும் நாவால் நக்கினான்.
அந்த காட்சியை பார்த்து வெறுப்படைந்த ருவான் “நீ மெதுவா வாடா நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தான்.
குடிபோதை தலைக்கு ஏறியதால் கொஞ்சம் தள்ளாடியபடியே மாயவன் நடந்தான். அப்போது அந்த சுடுகாட்டின் ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் பெருமூச்சு விடுவதுபோல் ஒரு அசசீரியை மாயவன் உணர்ந்தான். போதையிலும் அவனுக்கு உடல் சில்லிட்டுப்போனது.
ருவான் பாதையில் எங்காவது நிற்கிறானா, என்பதை கூர்ந்து பார்த்தான் அவன் நிற்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
‘இப்படி என்னை தனியே விட்டுட்டு போயிட்டானே பாவி’ன்னு மனதுக்குள் திட்டியவன் மூணு முறை சுடலையைப் பார்த்து காரி துப்பியவன் தைரியமாக நடந்தான்.
வீட்டுக்கு வந்த மாயவன் களைத்து போனவனாக பாயில் சுருண்டு படுத்தான். அடுத்த நாள் மயவனை குளிர் காய்ச்சல் பிடித்தாட்டியது. அதோடு அவன் பித்து பிடித்தவன் மாதிரி வாய்க்கு வந்த தகாத வார்த்தைகளால் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான்.
மாயவனுக்கு பேய் பிடித்துவிட்டது என்ற செய்தி கலவானை பகுதி முழுவதும் காட்டுத் தீப்போல பற்றிக்கொண்டது. மாயவனுக்கு எப்படி பேய் பிடித்தது என்ற காரணத்தை அறிந்த ருவான் ‘உன் திமிருக்கு நல்லா வேணும்டா!’னு மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
சில நாட்கள் கழித்தும் மாயவன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாததால் அவனுக்கு பேய் விரட்ட முடிவு செய்த அவன் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் முத்து பூசாரியை அழைத்து வந்தார்கள்.
முத்து பூசைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தவர் பூஜை மன்றில் அமர்ந்து உடுக்கையை எடுத்து பலமாக தனது கரகரத்த குரலில் பாட ஆரம்பித்தார். அப்போது முத்துவின் ஞானக்கண்ணில் மாயவனோடு அன்று சுடுகாட்டில் இருந்த ஒருவனை பற்றி அவர் புரிந்து கொண்டார். அடுத்த நிமிடம் முத்து ‘மாயவனின் நண்பனுக்கு எல்லாம் தெரியும் அவனை முதலில் அழையுங்கள்’ என்று கட்டளையிட கூட்டத்தில் வியர்த்துபோயிருந்த ருவான் முத்துவின் முன்பாக வந்து அன்று நடந்த விடங்களை ஒன்றுவிடாமல் அப்படியே சொன்னான்.
விசயத்தை முழுதாக கேட்டு தெரிந்து கொண்ட முத்துவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. அடுத்த நிமிசமே முத்து அருள் வந்து ஆட தொடங்கினார். அவரின் மந்திர வித்தைகளை தாக்குபிடிக்க முடியாத அந்த தீய சக்தி முத்துவின் முன்னால் மண்டியிட்டு பணிந்தது.
நீ வந்த காரணத்தை சொல்லுன்னு பூசாரி சாட்டையை சுழற்றியபோது பயந்துபோன அந்த தீய சக்தி “அய்யோ பூசாரி தயவு செய்து என்னை அடிச்சிடாதீங்க. உங்க அடியை தாங்குகிற வலிமை எனக்கு கிடையாது.அனாதரவாக சாப்பாடில்லாமல் செத்துப்போன எனக்கு அன்னைக்குதான் நல்ல சாப்பாட்டை படையல் போட்டு வைத்தாங்க. எல்லோரும் போன பிறகு சாப்பிடலாம்னு காத்திருந்தேன். அப்போதான் இந்த சண்டாளன் மிச்சமீதி வைக்காம தின்னுட்டு போயிட்டான். அந்தக் கோவத்துலதான் அவன் மேல உட்கார்ந்துட்டேன். இனி இந்த பக்கமே வர மாட்டேன். ஆனா நான் ஒரு மூணு கறியோட ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட்டு பல வருசமாயிடுச்சு அதனால எனக்கு கோழிக் கறியோட ஒரு சாப்பாடு மட்டும் தந்திடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்!” என்று அந்த தீய சக்தி கேட்டப்போது மனம் இறங்கிய முத்து அந்த தீய சக்தி கேட்ட மாதிரியே ஒரு சாப்பாட்டை உடனடியாக தயார் செய்து கொடுத்து அதனை ஒரு போத்தலில் பிடித்து அடைத்தார்.
அதன் பிறகு சுடலைக்கு சென்ற அவர் அதற்கான பரிகார பூஜைகளை முடித்தவர். அந்த போத்தலை எரியும் நெருப்பில் போட்டார்.
இப்படி எத்தினையோ தீய சக்திகளின் கதையை முடித்த முத்து பூசாரிக்கு இப்போது நெருப்பில் எரியும் அந்த தீய சக்தியின் மீது ஒரு அனுதாபம் வந்தது.ஏனென்றால் முத்து ஒரு காலத்தில் அந்த முத்துராஜா கங்காணியிடம் வேலை செய்திருக்கிறாராம். ⚫

No comments:
Post a Comment