கிராபிக்ஸில் எம். ஜி. ஆரை மீண்டும் நாயகனாக்கி நடிக்க வைத்தால் அவருக்கு ஜோடியாக யாரைப் போடலாம்?
எஸ். கிருஷ்ணா, மஸ்கெலிய
அபிநய சரஸ்வதியைத்தான். அவரையும் கிராபிக்ஸில் கொண்டு வரலாம்.
அந்த கொஞ்சு மொழி, அன்ன நடை, இன்னும் பார்க்க தோன்றும்.
அப்படி நடந்தால் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம்ம மாஸ் ஹீரோ விஜய டி. ராஜேந்திரனின் 'கருப்பனின் காதலி'படம் எப்போது வெளியாகும்?
ராஜேந்திரன் ரசிகை எஸ். அருந்ததி, கண்டி
அவருக்கு ஓய்வு கிடைக்கும்போது மும்தாஜின் கால்சீட் கிடைக்க வேண்டும்.
அப்போதுதான் படம் முடிவடையும். அதன்பின்தான் வெளியீடு
TR ஒரு தசாவதானி. ஆனால் ஒன்று அவர் அரசியலில் கால் வைக்க வேண்டும் அல்லது சினிமாவில் கை வைக்க வேண்டும்!
அன்றைய கண்ணழகி மீனா. இன்றைய கண்ணழகி?
ஆர். கவிநேசன், பதுளை
இருக்கவே இருக்கிறார் பிந்து மாதவி. அவர் கண்ணுக்கும்
ஐந்து லட்சம் தரலாம்.
இப்போது மவுசு கண்ணுக்கு அல்ல. கண்போகும் இடத்துக்கு.
நம்ம நமீதா இப்போ என்ன செய்றாங்க?
அவர்களைப் பற்றிய தகவல்களை தரவும்
கே. பிரதீப், யாழ்ப்பாணம்
'மானாட மயிலாட' இறுதிப் போட்டிக்காக சிங்கப்பூர் போய்வந்த களைப்பு, அயர்ந்து தூங்கறாங்க. பகல்ல
தூங்குனா உடம்பு போடும்னு சொன்னா கேட்க மாட்டேன்றாங்க
கைவசம் படம் இல்லாவிட்டாலும் விசிறிகள் குறையவில்லை நமீதாவுக்கு
பிரசாந்த் மீண்டும் நாயகனாகிறாராமே? ஜெயிப்பாரா?
ஆர். கவிதா, இரத்தினபுரி
ஒரு திருமணம் எப்படி மாற்றிவிட்டது பார்த்தீர்களா?
பழைய தெம்பு வந்து விட்டது. விட்டதை நடிக்க வேண்டியதுதான்
'அஞ்சான்' ஊத்திகிச்சாமே?
எப். எச். எம். ரியாஸ், வெல்லம்பிட்டி
அஞ்சானைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. 3 நாளில் 30 கோடி வசூல் என்கிறது லிங்குசாமி தரப்பு. படத்தை
பேஸ்புக் வட்டாரம். யாரைத்தான் நம்புவது?
you tube,vimeo,Daily Motion இல் படம் பார்த்து பேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸில் விமர்சனம் எழுதி லைக், கமென்ட் மூலம் வாங்கிக் கட்டும் காலம் இது!







No comments:
Post a Comment