மணி ஸ்ரீகாந்தன்.
உலகிலேயே தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று கீழடி ஆய்வுகள் மீண்டும் உலகுக்கு நிரூபித்திருக்கிறது.
ஆங்கிலேயேர்கள் ஆதிவாசிகளாக காடுகளுக்குள் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் நாங்கள் வீட்டு மனைகள், மாட மாளிகைகள், கோயில் கோபுரங்கள் என்று நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
பழந்தமிழர் நாகரிகம் படிப்படியாக அழிந்து இன்று கடைசி விளிம்பில் நிற்கிறது. இன்றைய தமிழ் குழந்தைகளுக்கு அம்மி, ஆட்டுகல், உரல், உலக்கை, முறம், திருகைக்கல் என்று நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் எதுவுமே தெரியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
சொன்னால் ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். இந்தப் பொருட்கள் நம் வீடுகளிலிருந்து மறைந்து இப்போது 20 வது ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இதனையே மறந்துவிட்ட நம்மவர்களுக்கு எங்கே, சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் தெரியப் போகிறது!
‘கல்வெட்டு, வரிகயிரு, தாம்புக்கயிறு, வடகயிறு, பூட்டாத்தல, ஒலவாரம், மோத்தடி, வாங்கருவா, மட்டப்பலகை, பரம்புசெட்டு, தாருகுச்சி, கடமலக்குச்சி, கருக்கருவா,’ இந்த வார்தைகளை படிக்கும் நீங்கள் நம் நாட்டில் வைக்கப்பட்டுள்ள ஏதோ தமிழ் கொலை பதாகை என்று எண்ணியிருப்பீர்கள்.
ஆனால் இவைகள் எல்லாம் நம் முன்னோர்கள் விவசாயத்தில் பயன்படுத்திய பொருட்களின் பெயர்கள் என்பதுதான் உண்மை.
இப்படி நாம் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பொருட்கள் அழிந்து போய்விட்டதை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து உங்களுக்கு அடையாளப்படுத்தவே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுகிறோம்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரணியை அடுத்துள்ள கள்ளப்புலியூர் என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அது ஒரு விவசாய மண். பழங்கால தமிழர் அடையாளம் ஏதாவது இருக்குமா என்று அந்த மருத நிலத்தில் நடந்தேன்.
அப்போது ஒரு பழங்கால வீடு என் கண்ணில் பட்டது. நிச்சயம் அந்த வீட்டில் ஏதாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன்.
என்ன ஆச்சர்யம் அங்கே நான் புத்தகங்களில் படித்து தெரிந்து கொண்ட ‘குதிர்’ ஒன்று கவனிபாரற்று கிடப்பதை கண்டேன். வீட்டுமுற்றத்தில் உள்ள ‘குதிர்’ யானையின் கால் போன்று இருப்பதாக ஒரு சங்ககால புலவன் பாடியிருப்பது என் நினைவுக்கு வந்தது.
பணத்திற்கு பதிலாக தானியங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் தானியங்களை சேமித்து வைக்கும் கொள்கலன் பெட்டகமாக இந்த ‘குதிர்’ இருந்திருக்கிறது. குறிப்பாக எல்லா வீடுகளிலும் இந்த ‘குதிர்’ தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது.
வரகு மற்றும் வைக்கோலை பெரிய கயிறாக திரித்து வட்ட வட்டமாக கட்டி நாலடி அகலத்தில் ஆறடி உயரத்தில் ஒரு பெரிய குவளையை செய்து அந்த வைக்கோல் மீது களிமண்ணால் பூசி அதனை திடமான, வட்டமான சுவராக எழுப்பி பிறகு அந்தக் குதிரின் அடிப்பாகத்தில் சாணத்தால் மெழுகி இருக்கிறார்கள். இந்த குதிர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப சிறிது, பெரிதாக வடிவமைக்கப்படும்.
இந்தக் குதிரில் விவசாயிகள் நெல் அறுவடையின் போது களத்து மேட்டில் விற்பனையாகும் தானியத்தில் மீதமாக இருப்பதை இந்த குதிரில் கொட்டி மூடி வைப்பார்கள்.
குதிரை மூடுவதற்கு களி மண்ணால் பெரிய வட்டமான மூடியும் செய்து வைத்திருப்பார்கள். தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க கருநொச்சி, வேப்பிலைகளைப் போட்டு வைப்பார்கள்.
அப்படி கொட்டப்படும் தானியங்கள் இரண்டு வருடங்களுக்கு பழுதாகாமல் இருக்குமாம். இந்த குதிர் பெட்டகத்தில், முக்கியமாக நெல், பெரும்பாலும் பாதுகாக்கப்படும்.
வீட்டின் உணவுத் தேவைகளுக்கு இந்தக் குதிரின் அடிப்பாகத்தில் இருக்கும் சிறிய துவாரத்தை திறந்து நெல்லை எடுப்பார்கள். அப்படி எடுத்த பிறகு அந்த துவாரத்தில் தேங்காய் சிரட்டையை வைத்து அடைத்து மண்ணால் மூடிவிடுவார்கள்.
திருமணம், காதுகுத்து, பிள்ளை வயசுக்கு வருதல் என்று வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் இந்த குதிர் நெல் தான் பணமாக பண்டமாற்றுதலுக்கு கைக்கொடுக்குமாம்.
வீட்டு விஷேசத்துக்கு அணிவதற்காக வாங்கும் தங்கம், சேலை, வளையல் முதல்கொண்டு சிறுவர்கள்; வீட்டில் சாப்பிடும் குச்சு மிட்டாய் வரை இந்த குதிரில் எடுக்கப்படும் தானியத்தால்தான் அந்தக் காலத்தில் காரியம் நடந்திருக்கிறது.
காங்கு, தொம்பைகூண்டு என்று பலப்பெயர்களில் இந்த குதிர் பெட்டகத்தை அழைக்கிறார்கள். வசதியான வீடுகளில் இரண்டு, மூன்று குதிர்கள் இருக்குமாம். இந்தக் குதிரின் எண்ணிக்கையில்தான் அந்தக் குடும்பத்தினர் வசதியானவரா என்று கண்டுப்பிடிப்பார்களாம்.
அந்தக் காலத்தில் கிராமத்தில் நடைபெறும் திருமண பேச்சு வார்தையில் ‘உங்கள் வீட்டில் ‘குதிர்’ இருக்கா’ என்றுதான் கேட்பார்களாம்.
‘குதிர்’ இருக்கும் வீடு செல்வந்த வீடாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
“எங்கப் பொண்ணு வாக்கப்பட்டு போன வீட்டுல மூணு ‘குதிர்’ இருக்கு அவ நல்லா சீரும் சிறப்போடு இருக்கா” என்று கிராமத்தில் பெண்கள், கிணத்தடியில் கதையளப்பார்களாம்.
பணக்காரர்கள், ஏழைகள் என்று எல்லோரிடமும் தானியங்களை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக தலித்துகளின் வீடுகள் ரொம்பவும் சிறிதாக இருந்ததினால் அவர்களின் வீட்டினுள் குதிர் வைக்க இடமில்லாததால் வீட்டுக்கு வெளியே ஒரு சிறிய குடிசை அமைத்து அதற்குள் இந்த குதிரை செய்து வைத்திருப்பார்களாம். அதனை ‘சேர்’ என்று அழைத்திருக்கிறார்கள்.
விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட கூலி வேலைக்கு சென்று ஊதியமாக தானியங்களை பெற்று வந்து இந்த குதிரில் போட்டு சேமித்து வைப்பார்களாம்.
இதில் தானியங்களை போடும் போது நல்ல நேரம் பார்த்து தம் வீட்டு சிறுவர்களின் கையில் ஒரு பிடி தானியத்தை கொடுத்து குதிரில் கொட்டச் சொல்வார்களாம். அப்படிப் போட்டால் தானியம் குறையாமல் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை.
அதே மாதிரி குதிரில் இருந்து தானியத்தை எடுக்கும் போது நல்ல நேரத்தில்தான் எடுப்பார்களாம். அதே மாதிரி தீபாவளி, பொங்கல் சித்திரை போன்ற பண்டிகை நாட்களில் குதிருக்கு திருநீரு, குங்குமம் வைத்து கற்பூரம் காட்டி கும்பிடுவார்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கேற்றும் போது, மறக்காமல் குதிருக்கும் சாம்பிராணி காட்டப்படுமாம்.
சில குதிர்கள் பெரிதாக இருந்தால் அவற்றுக்கு ஒரு ஏணி வைத்து ஏறித்தான் தானியங்களை குதிருக்குள் கொட்டுவார்களாம். குதிரில் தானியம் குறைந்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு குதிரின் நுனிக்கும், அடிப்பாகத்துக்கு இடைப்பட்ட நடுப்பகுதியில் ஒரு சிறிய துவாரம் வைத்து அதனை திறந்து தானிய அளவை கண்காணிப்பார்கள்.
பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் குதிருக்கு பதிலாக ‘பத்தாயம்’ இருக்குமாம். இது மா, பலா பலகையில் செய்யப்பட்ட ஒரு பெரிய உயரமான பெட்டி இதில்தான் தானியங்களை சேமித்திருக்கிறார்கள். இந்த பெட்டியின் அடிவாரத்தில் ஒரு சிறிய கதவு இருக்கும் அதை ஒரு பூட்டு போட்டு பூட்டியிருப்பார்கள். அதன் வழியேதான் தேவையான போது தானியங்களை எடுத்துக்கொள்வார்களாம்.
‘இந்த ‘பத்தாயம்’ குதிருக்கு பிறகுதான் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும், சங்க இலக்கியங்களில் ‘பத்தாயம்’ பற்றி எதுவும் குறிப்பிடபடவில்லை’ என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.
அந்தக் காலத்தில் நெல் அறுவடை என்பது வருடத்திற்கு ஒரு முறைதான் நடக்கும். அதனை ஒரு போகம் என்று சொல்வார்கள். அதனால் அவர்களுக்கு நெல்லை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம்; இருந்தது. அறுவடைக் காலங்களில் நெல் குறைந்த விலைக்குதான் விற்பனையாகும் ஆனால் கோடை காலத்தில் அதன் விலை பல மடங்காக உயர்ந்து விடும். அந்த சமயத்தில் குதிரில் சேமிக்கப்பட்டிருக்கும் நெல் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல. நீர் இறைக்கும் இயந்திரம், ஆழ்துளை கிணறு என்பன வந்து விட்டதால் தமிழகத்தில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் அறுவடை நடக்கிறது. அதனால் நெல்லை சேமித்து வைக்க வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது.
அதனால் தமிழர்களின் அந்தக் கால ஏடிஎம் மெஷினாக பயன் படுத்தப்பட்டு வந்த குதிர், பத்தாயம், தொம்பை உள்ளிட்டவைகளை தமிழர்கள் மறந்து போனார்கள்.🔵

| குதிரோடு கட்டுரையாளர்.. |

| ‘சேர்’ |

![]() |
| பத்தாயம் |

No comments:
Post a Comment