மணி ஸ்ரீகாந்தன்
இலங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கிரிவெசிபுர’. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை கதைக் கருவாக கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் இராஜாதி இராஜசிங்கனின் மனைவியின் தம்பியான முத்துசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்தான் எல்றோய் அமலதாஸ். இவர் பல்வேறு துறைகளில் நுழைந்து அதகளம் செய்யும் ஒரு துடிப்புமிக்க இளைஞர்.
தோள்பையை முதுகில் சுமந்தபடியே காடு, மலை, ஏரி, குளம் என்று அசால்ட்டாக ஏறி, இறங்கி தனது கேமரா கண்ணில் பட்ட காட்சிகளையெல்லாம் அற்புதமாக சுட்டெடுக்கும் நல்லதொரு புகைப்படக் கலைஞனாக இருக்கும் இவர், மிகவும் பின்தங்கிய கிராம பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு இசையையும் அட்சரம் பிசகாமல் பாடம் நடத்தும் ஒரு நல்லாசனாகவும் இருக்கிறார். பல்கலைக்கழகங்களில் புகைப்படம் பற்றிய விரிவுரை செய்பவராகவும் பணியாற்றுகிறார்.
அப்புறம் எங்கே ஆளையே காணோம்னு தேடினால் முகத்தில் அரிதாரம் பூசிய நடிகனாக கூத்துக்கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்.
இப்படி பன்முக ஆளுமைகளில், அசாத்திய திறமையோடு பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் எல்றோய் அமலதாஸை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
“எனது கலைப் பிரவேசத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனது தந்தைதான். அவர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியவர். அதோடு மேலேத்தேய வாத்தியங்களை இசைப்பதில் விற்பனராக இருந்திருக்கிறார். அந்தத் துறையில் அவர் நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரின் பாதிப்புத்தான் என்னை இந்த துறைக்குள் பயணிக்கச் செய்தது.
நான் போரின் வலிகளை சுமந்தவன். நிறைய இடம்பெயர்வுகளை சந்தித்திருக்கிறேன். எனது இடம்பெயர்வின் நெடும் பயணம் என்னை இறுதியாக கொழும்புக்கு கொண்டு வந்து விட்டது.
அங்கேதான் என் கலைப் பயணத்தின் முதல் பிள்ளையார் சுழி போடப்பட்டது.” என்று படபடத்து நிறுத்தினார்.
எல்றோய் அமலதாஸ் கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிறைவேற்று தயாரிப்பாளராக பணியாற்றியவர். அதோடு ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் 54 பாகங்களை இயக்கியதோடு, ஐந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இசைக் கலைஞரான இவரின் இசையில் சிங்கள திரைப்படம் ஒன்று விரைவில் திரைக்கு வரவிருப்பதோடு, சில தொலைக்காட்சி நாடகங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இவரின் கலைப்பயணத்தில் ஜனாதிபதி விருதுகள் முதல் கொண்டு அனைத்து துறைகளிலும் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர், தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
வரலாற்று திரைப்படமான கிரிவெசிபுர பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டோம்,
“எனக்கு இந்தப் பட வாய்ப்பை இலங்கையின் முன்னணி நடிகையும் சகோதரியுமான நிரஞ்சனி சண்முகராஜா எனக்கு வழங்கியிருந்தார். ஒரு நாள் அழைப்பில் வந்த அவர் கிரிவெசிபுர படம் பற்றி சொல்லி என்னை பட அலுவலத்துக்குச் சென்று இயக்குநர் தேவிந்த கோங்கஹகேயை சந்திக்கும்படி சொன்னார். இயக்குநரும் என்னை பார்த்ததும் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, என்னை முத்துசாமி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கூறினார்.
எனக்கு வரலாற்று தேடுதல்களில் ரொம்பவும் ஆர்வம். அதனால் அந்தக் கதாபாத்திரத்தில் ரொம்பவும் விருப்பத்துடன் நடித்தேன்.” என்றார்.
கண்டி மன்னரின் வரலாற்றுக் கதையின்படி இராஜாதி இராஜசிங்கனின் நான்கு மனைவிகளில் ஒருத்திக்கு ஏழு சகோதரர்கள். அவர்களில் ஒருவர்தான் முத்துசாமி. மன்னருக்கு பிள்ளைகள் இல்லாததால் அவருக்கு பிறகு இந்த சகோதரர்களில் யாராவது ஒருவர் மன்னராக அரியாசனம் ஏறலாம் என்பது நாயக்க வம்சத்தின் வழக்கமாக இருந்தது.
மன்னர் இராஜாதி இராஜசிங்கன் மரணப் படுக்கையில் இருந்தபோது தனக்குப் பிறகு ராணிமார்களின் தம்பிகளில் ஒருவரை அவர்கள் தெரிவு செய்து அரியாசனத்தில் அமர வைக்கும் வரை, தற்காலிகமாக முத்துசாமியை நியமிக்க முடிவெடுத்தப்போது முதலமைச்சராக இருந்த பிலிமத்தலாவை அவனை பதவியேற்க விடாமல் தடுத்து விட்டான்.
பிலிமத்தலாவையின் கைப்பாவையாக வைத்து ஆட்டிப்படைப்பதற்கு கண்ணுசாமியை அரியாசனத்தில் அமரவைத்தான். ஆனாலும் அரியாசனத்துக்கு தகுதியுடைய முத்துசாமி கண்ணுசாமிக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியை கைப்பற்றலாம் என்று எண்ணி முத்துசாமியை கொல்வதற்கு பிலிமத்தலாவை திட்டம் போட்டான்.
பிலிமத்தலாவையின் சதித்திட்டம் தெரிந்து, அரண்மனையிலிருந்து தப்பிய முத்துசாமி, கொழும்பிலிருந்த பிரித்தானிய தேசாதிபதி நோர்த்திடம் சென்று முறையிட்டான்.
முத்துசாமியின் நிலைமையை புரிந்துகொண்ட நோர்த் அவனுக்கு அபயம் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து ஒரு மெய்க்காப்பாளனுடன் யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த அரண்மனையில் போய் தங்குமாறு பணித்தார்.
யாழ். கோட்டைக்குள் முத்துசாமி சிறிது காலம் தங்கியிருந்தான். அப்போது ஒருநாள் விஸ்வநாத சாத்திரியாரை அழைத்து ‘தனக்குரித்தான பட்டம் கிடைக்குமா?’ என்று கேட்டான்.
அதற்கு சாத்திரியார் ‘பட்டம் சமீபத்திலேயே கிடைத்து விடும். ஆனால் பட்டத்துக்கு முன்பும், பின்பும் அரிப்பகை’ என்றாராம். இதனைக் கேட்டு உச்சிக் குளிர்ந்து போன முத்துசாமி சாத்திரியாருக்கு இராஜ ஜோதிடர் என்ற பட்டமும், பணமும் கொடுத்து அவரை கௌரவப்படுத்தினான்.
பதவிக்கு முன்னால் பாம்பு பகையும், அதற்குப் பிறகு தலையை அரியும் பகையும் இருக்கிறது என்று சாத்திரியார் சொன்னதின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் முத்துசாமி மகிழ்ச்சியில் திளைத்தான். அடுத்து வந்த இரண்டு நாட்களில் அவனை நாகம் தீண்டியது. உடனே யாழ்ப்பாணத்தின் பிரபல விஷக்கடி வைத்தியரான இருபாலை செட்டியார் அழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்குச் சென்ற முத்துசாமி காப்பாற்றப்பட்டான்.
அதன் பிறகு சாத்திரியாரின் வாக்குப்படி முத்துசாமி அரியணை ஏறினான். சில நாட்களிலேயே பிலிமத்தலாவை, கண்ணுசாமியின் சதியால் மீண்டும் பதவியை இழந்ததோடு அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிரச்சேதமும் செய்யப்பட்டது. இதுதான் அந்தக் கதை.
இந்தப் பாத்திரத்தில் எல்றோய் அமலதாஸ் நடிக்கும் போது சில விசயங்கள் முத்துசாமியின் வரலாற்றில் நடந்தது போன்று படப்பிடிப்பிலும் நடந்திருக்கிறதாம். தனக்கும் முத்துசாமிக்கும் பூர்வ ஜென்ம தொடர்பு எதுவும் இருக்குமோ என்று நினைத்து பூரித்துப்போகும் எல்றோய் அந்த சம்பவங்கள் பற்றி விபரித்தார்.
“ஒரு நாள் படப்பிடிப்பில் இயக்குநர் என்னிடம் வந்து ‘எல்றோய் வெளியே வந்து பாருங்கள் உங்க நண்பர் வந்திருக்கிறார்’ என்று அழைத்தார். அப்போது நானும் ஆவலாக
வெளியே வந்து பார்த்தேன். அப்போது ஒரு பாம்பாட்டி ஒரு நாகத்தை கொண்டு வந்திருந்தான். அதனைப் பார்த்து சந்தோசப்பட்டு போன நான் ‘பாம்புக்கு பல்லு பிடுங்கிருக்கு’ என்று பாம்பாட்டி சொன்னதை நம்பி ரொம்பவும் தைரியமாக பாம்பைப் பிடித்தேன். பிடித்த அடுத்த நொடியே பாம்பு என் கையை தீண்டியது அதன் இரண்டு பற்களும் என் கையின் தசைகளுக்குள் ஆழமாக இறங்கி நின்றது.
அவசரமோ, அதிர்ச்சியோ அடையாத நான் மிகவும் நிதானமாக அந்த பாம்பின் வாயை பிடித்து என் தசைக்குள் அமிழ்ந்திருந்த பற்களோடு வெளியே எடுத்தேன்.
அப்போது பாம்பு சீண்டிய இடத்திலிருந்து இரண்டு சொட்டு இரத்தம் வெளியே வந்து எட்டிப்பார்த்தது. அந்த நாகத்துக்கு பல்லு பிடுங்கவில்லை என்பது அப்போதான் அந்த பாம்பாட்டிக்கே தெரிந்தது.
பாம்பு பிடிப்பதிலும் எனக்கு ரொம்பவும் பரீட்சியம் இருக்கிறது. பல்லு பிடுங்காத பாம்பை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனாலும் பாம்பாட்டியின் வார்த்தையை நம்பிதான் அந்த பாம்பை நான் சரியாக கையாளவில்லை.
வைத்தியசாலைக்கு போகலாமா என்று படப்பிடிப்பு குழு பதறிப்போய் கேட்டபோது நான் கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று சொன்னேன். நான் ஒரு நிமிடத்தை கூட சும்மா வெட்டியாக கழிப்பதில்லை, எனக்கு கிடைத்த அந்த சில நிமிட ஓய்வில் போனில் தேடி என்னைக் கடித்த ராஜநாகம் பற்றிய குறிப்புகளையும் எடுத்து அதற்கான முதலுதவிகளையும் தெரிந்து அதனை மேற்கொள்ளவும் செய்தேன்.
ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றம் உணர்ந்து வைத்தியசாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறிது நேரத்துக்கு பிறகு என் பார்வைக்கு எல்லாம் இரண்டாக தெரிந்தது அப்படியே மயங்கிப் போனேன். அதன் பிறகு அடுத்த நாள்தான் கண்விழித்தேன்.
முத்துசாமியை போலவே நானும் மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியிருகிறேன். அந்த இராஜ நாகம் கடித்தால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று கூகுலில் படித்தபோது கொஞ்சம் ஆடித்தான் போனேன்.
ஆனாலும் பாம்பு என்னைக் கடித்தபோது நான் அதனை பெரிதாக எடுக்கவும் இல்லை, பயப்படவும் இல்லை. ஒன்று தெரியுமா, பாம்பு கடித்ததும் எமக்குள் ஏற்படும் பயமே அந்த விஷத்தை சில நிமிடங்களுக்குள் உடம்பு முழுவதும் பரவச் செய்து நம்மை கொன்று விடுமாம்.
பாம்புக் கடியை நான் அசால்ட்டாக எடுத்துக்கொண்டதுதான், அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைக்கவும் காரணமாக இருந்தது.” என்று எல்றோய் தமது அனுபவத்தை மெய்சிலிர்த்து கூறினார்.
ஏழாம் அறிவில் வருவது போல அவருதான், இவரோ? நாமும் நம்ப முடியாத ஆச்சர்யங்களோடு அவரிடமிருந்து விடைப்பெற்றோம்.🔴
இலங்கையில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கிரிவெசிபுர’. கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை கதைக் கருவாக கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் இராஜாதி இராஜசிங்கனின் மனைவியின் தம்பியான முத்துசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்தான் எல்றோய் அமலதாஸ். இவர் பல்வேறு துறைகளில் நுழைந்து அதகளம் செய்யும் ஒரு துடிப்புமிக்க இளைஞர்.
![]() |

No comments:
Post a Comment