இங்கிரிய,றைகம் மேற்பிரிவு அருள்மிகு காட்டு முனீஸ்வரன் கோவிலின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோலாகலமாக இன்று (25-09-2016) நடைபெற்றது.முனீஸ்வரனுக்கு 108 படையல் போட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.கூலித் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேறிய நம் உறவுகள் தாயகத்திலிருந்து வரும்போதே தமது குலதெய்வத்தையும் பிடிமண்ணாக கொண்டு வந்தார்களாம்.அப்படி கொண்டு வரப்பட்டதுதான் இந்த காட்டு முனீஸ்வரன்.சுமார் நூறு ஆண்டுகளை கடந்து விட்ட இந்த ஆலயத்தில் இதுவரை திருவிழாக்கள் நடைபெற்றது இல்லை. பழமையான ஆலயமாக இருந்தாலும் இம்முறைதான் முதல்முறையாக திருவிழா நடைபெற்றது.
இன்றைக்கு தான் நான் இதை பார்க்கின்றேன்.! இதுதான் முதல் திருவிழாவா? இல்லை முன்பும் விழாக்கள் கொண்டாடப்பட்டனவா?
ReplyDeleteஇப்படி ஒரு கோவில் இருப்பதாக கேள்விப்பட்டதும் இன்றுதான். எவ்வாறாயினும் கிராமங்களில் நடக்கும் சிறு விடயமும் சிதறாமல் வெளிக்கொணரும் சேவைக்கு என் தலைவணக்கம்.!
நூறு ஆண்டுகளை கடந்து விட்டிருக்கும் இந்த காட்டு முனீஸ்வரனுக்கு இதுதான் முதல் திருவிழா.தங்களின் கருத்துக்கு நன்றி.தமிழ் வம்பன் செய்தியிலும் மாற்றம் செய்திருக்கிறேன்,கவனிக்கவும்.
Delete