தினகரன், தினகரன் வாரமஞ்சரி,வண்ண வானவில் பத்திரிகைகளின் விரிவாக்கம் தொடர்பான வீதி உலா! ‘மீன் பாடும் தேன் நாடு’ என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் கடந்த 15ம் திகதி மாலை 5மணியளவில் சிறப்பு அதிதிகளின் மங்கள விளக்கேற்றுதலுடன்,கலை நிகழ்ச்சி,சிறப்புரை,அதிதிகள் கௌரவிப்பு,விருது வழங்கல் என்று கோலாகலமாக தொடங்கிய நிகழ்வு,மறுநாள் காலை 7மணியிலிருந்து வீதி உலாவாக கலைக்கட்டியது.மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விரிவாக்கல் பயணம் ஏறாவூர்,வாழைச்சேனை,செங்கலடி,காத்தான்குடி,ஆரையம்பதி, துறைநீலாவணை வரை தொடர்ந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறப்புகளை தாங்கி 76பக்கங்களோடு (16-02-2017)அன்று வெளியான தினகரன் நாளிதல் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment