மணி ஸ்ரீகாந்தன்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த முதல் தலைமுறையினரின் கனவு இந்த மண்ணில் வேலை செய்து பொருள், பணத்துடன் தாயகம் திரும்புவதுதான். ஆனால், அந்த கனவு எல்லோருக்கும் நனவாகிவிடவில்லை.
ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் மூன்றரை லட்சம் பேர் மட்டுமே தாயகம் திரும்பினார்கள். பல லட்சம் பேர் பிறகு போகலாம் என்று காலத்தை தள்ளிப்போட்டு வந்தார்கள். இந்தியாவுக்கான கப்பல் சேவையும் 83 ஜுலை கலவரத்துக்கு பிறகு நின்று விட்டதால் அவர்களின் தாயகம் செல்லும் கனவும் தகர்ந்து போய் விட்டது.
அதன் பிறகு அந்த தலைமுறையினர் எல்லோரும் இந்த மண்ணுக்கே உரமாகிவிட இன்றைய மூன்றாவது தலைமுறையினருக்கு பூட்டனின் ஊர் பற்றி எதுவும் தெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவர்களுக்கு அது அவசியமும் இல்லை.
ஒரு காலத்தில் இந்திய பயணம் என்பது குதிரை கொம்பாக இருந்த காலம் போய் இன்று நினைத்தால் ஒரு மணி நேரத்தில் சென்னை என்று நிலமை மாறிவிட்டது.
இதில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றுவிட்டதால் அவர்கள் எப்போது இலங்கையில் இருக்கிறார்கள், இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை.
இலங்கையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமான சேவையில் இந்தியாவுக்கே அதிகளவிலான விமானங்கள் இயக்கப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கொழும்பிலிருந்து விமானங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
வியாபாரம், ஆன்மீக சுற்றுலா என்று அதிகளவிலான பயணிகள் தமிழகத்துக்கு செல்கிறார்கள்.
சபரிமலைக்கு செல்பவர்களும் தமிழக விமான நிலையங்களில் இறங்கியே கேரளாவுக்கு செல்கிறார்கள். அப்படி தமிழகத்துக்கு சென்று வருபவர்களிடம் தமிழ்நாடு, கலாச்சாரம், உணவு தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சிலரிடம் கேட்டோம்.
களுத்துறை, இங்கிரிய நகரத்தில் ஃபேஷன் கடை நடத்தும் ‘லவ்லி கிப்ட்’ ஸ்ரீகாந்த் தனது அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார். “நான் மலைக்கு மாலை போட்டு போகும் போது சென்னைக்கு போனேன். நாங்கள் நினைப்பது போல அங்கே ஒண்ணுமே இல்லை. சென்னையில் ஒழுங்கான சாப்பாடு கடைக்கூட கிடையாது. நல்ல உணவை பார்ப்பது கஷ்டம், டீயும், வடையும் மட்டும்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கு.
இலங்கையோடு ஒப்பிடும் போது போக்குவரத்து மிகவும் மோசம். அதோடு சுத்தம் அறவேயில்லை, பொது இடத்தில் சகட்டுமேனிக்கு சிறு நீர் கழிக்கிறானுங்க. சீ! என்னங்க ஊரு அது. இலங்கை மாதிரி ஒரு நாடு நமக்கு கிடைச்சது நாம் செய்த பாக்கியம்” என்று ஸ்ரீகாந்த் தமிழகத்தை போட்டுத்தாக்கினார்.
இன்று இந்தியா பல துறைகளில் பெறும் வளர்ச்சி அடைந்திருப்பதை உலக நாடுகள் நன்கு உணர்ந்திருப்பது நிதர்சனம். அதில் குறிப்பாக வேளாண் மற்றும் உணவு உற்பத்தி துறையில் உலகின் தரவரிசையில், இந்தியா 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இந்தியாவில் தென் மாநிலமான தமிழ்நாடு பெறும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாழை, அரிசி, பால், கோப்பி, தேநீர், கோழி, இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் தரமான உணவு உற்பத்தி திறனை வெளி உலகிற்கு உணர்த்தவும், வர்த்தக ரீதியாக இத்துறையில் வளர்ச்சியை ஈட்டவும் உணவு திருவிழாவும் நடைபெறுகிறது.
ஆசியாவில் உணவுத் திருவிழா அதிகமாக நடைபெறும் இடமாக தமிழகம் விளங்குகிறது.
தமிழர் பாரம்பரியத்தில் சமையல் கலை முக்கிய இடத்தை வகிக்கிறது.
தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையாது இடம் பெறுகின்றன.
சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
இது தவிர இன்றைய திண்டுக்கல் தலப்பாக்கட்டு முதல் செட்டிநாடு உணவு வகைகள் என்று ஏராளம். உலகிலேயே மிகச் சிறந்த உணவு என்றால் அது இட்லிதான் என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நம் நாட்டோடு ஒப்பிடும் போதும் அதிகளவிலான உணவு ஐட்டங்கள் தமிழகத்திலேயே கிடைக்கிறது. என்பதுதான் உண்மை ஆனால் சென்னையில் நாவுக்கு ருசியான உணவு இல்லை என்று அவர் சொல்வதுதான் ஆச்சர்யம் தருகிறது.
இனி ஹொரணை பிரதேச சபையில் தமிழ் மொழி இணைப்பாளராக கடமையாற்றும் விமலநேசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“தமிழக பயணம் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம். கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்னையில் விமானம் தரையிறங்கியதும் என் பூர்வீக மண்ணில் என் கால் தடம் பதித்தபோது ஒரு இனம் தெரியாத பூரிப்பு அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
நிமிர்ந்து பார்த்தேன். ‘அண்ணா பன்னாட்டு முனையம்’ என்று பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருந்து. திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் அதை பார்த்த போது ஒரு அலாதி இன்பம் ஏற்பட்டது.
தமிழகத்தை பற்றி சிலர் மட்டமான விமர்சனங்களை முன்வைக்கலாம் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஆனால் மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை உயிராக நேசிப்பவர்கள் யாரும் தமிழகத்தை வெறுக்கமாட்டார்கள்.
உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு சென்றாலும் முதலில் தண்ணீர் அல்லது மோர் கொடுக்கும் அந்த வழக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
யாரையாவது எங்காவது கண்டால் ‘சாப்பீட்டீங்களா சார்?”என்று கேட்கும் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடும் என்னை நெகிழச்செய்கிறது.
என்னைக் கேட்டால், நன்றாக சாப்பிட கூடியவர்கள் தமிழகத்துக்கு செல்வதுதான் சிறந்தது என்பேன். ஏனென்றால், அத்தனை வகையான உணவு ஐட்டங்கள்! எதைச் சாப்பிடுவது என்பது தெரியாமல் திணறியே போய்விடுகிறோம்.
ஒரு வேளை உணவு மூன்று ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபா வரைக்கும் கிடைக்கும் அதிசயம் தமிழகத்தில்தான் நடக்கிறது.
நம் நாட்டில் உணவு எல்லோருக்கும் ஒரே விலையில்தான் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் அவன் தகுதிக்கேற்ற விலைகளில் கிடைக்கிறது.
போக்குவரத்து என்பது தமிழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரிய பேரூந்து நிலையமாக கோயம்பேடு இருக்கிறது.
பாராமரிப்பு சுத்தம் என்பது கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தை விட சிறப்பாகவே உள்ளது.
24மணி நேரமும் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. என்று தமிழக நினைவுகளை விமலநேசன் சிலாகித்து சொல்கிறார்.
தமிழகத்தில் பஸ் கட்டணங்களும் பஸ்சின் தரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதி நவீன சொகுசு, அரை சொகுசு என்று வகை வகையான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் பேரூந்துகளைவிட அரசு பஸ்களே அதிகளவில் இயக்கப்படுவதால் தனியார் பஸ்கள் நம் நாட்டைப் போல செல்வாக்கு செலுத்துவதில்லை, அவர்களின் போராட்டங்களால் போக்குவரத்து இங்கே மாதிரி ஸ்தம்பித்து போவதுமில்லை.
இதே வேளை ஹொரணையைச் சேர்ந்த குடும்பத் தலைவி தனலக்ஷ்மி மாதவன் சொல்லும் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கிறது.
“அந்த நாட்டில் சுத்தமும், மனிதநேயமும் அறவே கிடையாது. இங்கே பஸ்களில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளோடு வரும் பெண்கள், என்று யார் வந்தாலும் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் உடனே எழுந்து அவர்களை அந்த சீட்டில் அமரவைப்பார்கள். அல்லது பஸ் நடத்துனர் “யாராவது அவங்களுக்கு சீட் கொடுத்து உதவுங்கள்” என்று கட்டளை போடுவார். இந்தப் பழக்கம் தமிழகத்தில் அறவே இல்லை. கர்ப்பிணி பெண்கள், குழந்தையோடு இருக்கும் தாய்மார்கள் என்று பஸ்சில் நின்றபடியே பயணம் செய்யும் அவலம் அங்கே நடக்கிறது. பஸ்சில் அமர்ந்திருக்கும் பெண்களோ, பஸ் நடத்துனரோ கர்ப்பிணிகளை கண்டு கொள்வதே இல்லை என்று வேதனைப்படும் தனலக்ஷ்மி, பிழையில்லாத தமிழ் விளம்பர பலகைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்ம நாட்டை விட அது பரவாயில்லை. நம் நாட்டில் பஸ் போர்டில் தொடங்கி டெங்கு ஒழிப்பு விளம்பரம் வரை ஏகப்பட்ட தமிழ் கொலை. தமிழகத்தில் நமது பாரம்பரியம், தொன்மையான ஆலயங்கள், கல்வெட்டு, சிற்பம் என்று இன்று வரை பேணி பாதுகாத்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
தமிழக பஸ்களில் கர்பிணி பெண்களுக்கு சீட் தர மறுக்கிறார்கள் என்பது அவரின் குற்றச்சாட்டு என்றாலும், தமிழக பேரூந்துகளில் பெண்களுக்கென ஒரு பக்கம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தப்பித்தவறிக்கூட ஆண்கள் அமர்ந்துவிட முடியாது. அப்படி அமர்ந்து விட்டால், “யோவ் எந்திரியா அது பொம்புளை சீட்டு”என்று நடத்துனர் கத்துவதும் பெண்கள் ஒரு பக்கம் மிரட்டுவதும் வழமையாக நடைபெறும். இந்த நிலமை நம்நாட்டில் இல்லை.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த முதல் தலைமுறையினரின் கனவு இந்த மண்ணில் வேலை செய்து பொருள், பணத்துடன் தாயகம் திரும்புவதுதான். ஆனால், அந்த கனவு எல்லோருக்கும் நனவாகிவிடவில்லை.
ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் சுமார் மூன்றரை லட்சம் பேர் மட்டுமே தாயகம் திரும்பினார்கள். பல லட்சம் பேர் பிறகு போகலாம் என்று காலத்தை தள்ளிப்போட்டு வந்தார்கள். இந்தியாவுக்கான கப்பல் சேவையும் 83 ஜுலை கலவரத்துக்கு பிறகு நின்று விட்டதால் அவர்களின் தாயகம் செல்லும் கனவும் தகர்ந்து போய் விட்டது.
அதன் பிறகு அந்த தலைமுறையினர் எல்லோரும் இந்த மண்ணுக்கே உரமாகிவிட இன்றைய மூன்றாவது தலைமுறையினருக்கு பூட்டனின் ஊர் பற்றி எதுவும் தெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவர்களுக்கு அது அவசியமும் இல்லை.
| ஸ்ரீகாந்த் |
இதில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றுவிட்டதால் அவர்கள் எப்போது இலங்கையில் இருக்கிறார்கள், இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதே தெரிவதில்லை.
இலங்கையிலிருந்து இயக்கப்படும் சர்வதேச விமான சேவையில் இந்தியாவுக்கே அதிகளவிலான விமானங்கள் இயக்கப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கொழும்பிலிருந்து விமானங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
வியாபாரம், ஆன்மீக சுற்றுலா என்று அதிகளவிலான பயணிகள் தமிழகத்துக்கு செல்கிறார்கள்.
சபரிமலைக்கு செல்பவர்களும் தமிழக விமான நிலையங்களில் இறங்கியே கேரளாவுக்கு செல்கிறார்கள். அப்படி தமிழகத்துக்கு சென்று வருபவர்களிடம் தமிழ்நாடு, கலாச்சாரம், உணவு தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று சிலரிடம் கேட்டோம்.
களுத்துறை, இங்கிரிய நகரத்தில் ஃபேஷன் கடை நடத்தும் ‘லவ்லி கிப்ட்’ ஸ்ரீகாந்த் தனது அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார். “நான் மலைக்கு மாலை போட்டு போகும் போது சென்னைக்கு போனேன். நாங்கள் நினைப்பது போல அங்கே ஒண்ணுமே இல்லை. சென்னையில் ஒழுங்கான சாப்பாடு கடைக்கூட கிடையாது. நல்ல உணவை பார்ப்பது கஷ்டம், டீயும், வடையும் மட்டும்தான் ஓரளவுக்கு நல்லா இருக்கு.
| விமலநேசன் |
இன்று இந்தியா பல துறைகளில் பெறும் வளர்ச்சி அடைந்திருப்பதை உலக நாடுகள் நன்கு உணர்ந்திருப்பது நிதர்சனம். அதில் குறிப்பாக வேளாண் மற்றும் உணவு உற்பத்தி துறையில் உலகின் தரவரிசையில், இந்தியா 2வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இந்தியாவில் தென் மாநிலமான தமிழ்நாடு பெறும் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பெருமளவில் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாழை, அரிசி, பால், கோப்பி, தேநீர், கோழி, இறைச்சி உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் தரமான உணவு உற்பத்தி திறனை வெளி உலகிற்கு உணர்த்தவும், வர்த்தக ரீதியாக இத்துறையில் வளர்ச்சியை ஈட்டவும் உணவு திருவிழாவும் நடைபெறுகிறது.
ஆசியாவில் உணவுத் திருவிழா அதிகமாக நடைபெறும் இடமாக தமிழகம் விளங்குகிறது.
| தனலக்ஷ்மி |
தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையாது இடம் பெறுகின்றன.
சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
இது தவிர இன்றைய திண்டுக்கல் தலப்பாக்கட்டு முதல் செட்டிநாடு உணவு வகைகள் என்று ஏராளம். உலகிலேயே மிகச் சிறந்த உணவு என்றால் அது இட்லிதான் என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நம் நாட்டோடு ஒப்பிடும் போதும் அதிகளவிலான உணவு ஐட்டங்கள் தமிழகத்திலேயே கிடைக்கிறது. என்பதுதான் உண்மை ஆனால் சென்னையில் நாவுக்கு ருசியான உணவு இல்லை என்று அவர் சொல்வதுதான் ஆச்சர்யம் தருகிறது.
இனி ஹொரணை பிரதேச சபையில் தமிழ் மொழி இணைப்பாளராக கடமையாற்றும் விமலநேசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“தமிழக பயணம் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம். கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்னையில் விமானம் தரையிறங்கியதும் என் பூர்வீக மண்ணில் என் கால் தடம் பதித்தபோது ஒரு இனம் தெரியாத பூரிப்பு அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
நிமிர்ந்து பார்த்தேன். ‘அண்ணா பன்னாட்டு முனையம்’ என்று பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருந்து. திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் அதை பார்த்த போது ஒரு அலாதி இன்பம் ஏற்பட்டது.
தமிழகத்தை பற்றி சிலர் மட்டமான விமர்சனங்களை முன்வைக்கலாம் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஆனால் மொழி, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை உயிராக நேசிப்பவர்கள் யாரும் தமிழகத்தை வெறுக்கமாட்டார்கள்.
உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு சென்றாலும் முதலில் தண்ணீர் அல்லது மோர் கொடுக்கும் அந்த வழக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
யாரையாவது எங்காவது கண்டால் ‘சாப்பீட்டீங்களா சார்?”என்று கேட்கும் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடும் என்னை நெகிழச்செய்கிறது.
என்னைக் கேட்டால், நன்றாக சாப்பிட கூடியவர்கள் தமிழகத்துக்கு செல்வதுதான் சிறந்தது என்பேன். ஏனென்றால், அத்தனை வகையான உணவு ஐட்டங்கள்! எதைச் சாப்பிடுவது என்பது தெரியாமல் திணறியே போய்விடுகிறோம்.
ஒரு வேளை உணவு மூன்று ரூபாயிலிருந்து மூவாயிரம் ரூபா வரைக்கும் கிடைக்கும் அதிசயம் தமிழகத்தில்தான் நடக்கிறது.
நம் நாட்டில் உணவு எல்லோருக்கும் ஒரே விலையில்தான் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் அவன் தகுதிக்கேற்ற விலைகளில் கிடைக்கிறது.
போக்குவரத்து என்பது தமிழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆசியாவில் மிகப்பெரிய பேரூந்து நிலையமாக கோயம்பேடு இருக்கிறது.
பாராமரிப்பு சுத்தம் என்பது கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தை விட சிறப்பாகவே உள்ளது.
24மணி நேரமும் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. என்று தமிழக நினைவுகளை விமலநேசன் சிலாகித்து சொல்கிறார்.
தமிழகத்தில் பஸ் கட்டணங்களும் பஸ்சின் தரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதி நவீன சொகுசு, அரை சொகுசு என்று வகை வகையான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் பேரூந்துகளைவிட அரசு பஸ்களே அதிகளவில் இயக்கப்படுவதால் தனியார் பஸ்கள் நம் நாட்டைப் போல செல்வாக்கு செலுத்துவதில்லை, அவர்களின் போராட்டங்களால் போக்குவரத்து இங்கே மாதிரி ஸ்தம்பித்து போவதுமில்லை.
இதே வேளை ஹொரணையைச் சேர்ந்த குடும்பத் தலைவி தனலக்ஷ்மி மாதவன் சொல்லும் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கிறது.
![]() |
தமிழக பஸ்களில் கர்பிணி பெண்களுக்கு சீட் தர மறுக்கிறார்கள் என்பது அவரின் குற்றச்சாட்டு என்றாலும், தமிழக பேரூந்துகளில் பெண்களுக்கென ஒரு பக்கம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தப்பித்தவறிக்கூட ஆண்கள் அமர்ந்துவிட முடியாது. அப்படி அமர்ந்து விட்டால், “யோவ் எந்திரியா அது பொம்புளை சீட்டு”என்று நடத்துனர் கத்துவதும் பெண்கள் ஒரு பக்கம் மிரட்டுவதும் வழமையாக நடைபெறும். இந்த நிலமை நம்நாட்டில் இல்லை.

No comments:
Post a Comment