Friday, July 12, 2019

முன்னணி நடிகைகள் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் நடித்தால் அவர்களின் மார்க்கெட் சரிந்ததாக கருதலாமா?



ஆர்.தனுஜன்-  வவுனியா

நிச்சயமாக இல்லை, சில வருடங்களுக்கு முன்னாள் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்த சிவாஜி படத்தில் ‘பல்லேலக்கா…’ பாடல் காட்சியில் மட்டுமே நயன்தாரா நடித்திருந்தார்.  அப்போ அவரின் மார்க்கெட் சரிந்து விட்டதா, இன்னும் நயன்தானே தமிழ் சினிமாவில் நம்பர் வன் நடிகையாக இருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பிலிருக்கும் நயன்தாரா நாயகியாக நடிக்கும் ஒரு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுகிறாராம்.
இதுபற்றி தமனாவிடம்  கேட்தற்கு, ‘நான் எனக்கு பிடித்த ஹீரோவுக்காகவே ஆடினேன். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு பெரிய நடிகருக்காக, அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்காகவே கவர்ச்சி நடனம் ஆடினேன்’ என்று விளக்கம் சொல்கிறார்! எனவே ஒற்றை பாடலுக்கு முன்னணி நடிகைகள் நடனம் ஆடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனவே குத்துப் பாட்டை அவரது மார்க்கட் நிலவரத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை.


ஹன்சிக்கா என்ன செய்றாங்க, இப்போ என்ன படம் பண்ணுறாங்க?
எஸ். சந்திரலதா- கஹவத்தை

தமிழிலும், தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்தவர், முன்னணி நாயகிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது யாரு கண்ணுபட்டதோ அம்மணிக்கு பட வாய்ப்புகள் திடீரென்று குறைந்து போனது.
இதற்கு அவரது உடல் வாகும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது! ஆகவே, கொழுக் மொழுக்கென இருந்த தனது உடலை, கடுமையான உடற் பயிற்சிக்குப் பிறகு குறைத்திருக்கிறார் ஹன்சிகா! இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது! கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய த்ரில்லர் படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார்.
அதோடு சிம்புவுடன் மஹா, ஆதியுடன் பாட்னர், அதர்வாவுடன் 100 உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
இந்தப் படங்கள் கை கொடுத்தால் ஹன்சிக்கா இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஒன்று, இரண்டாவது இன்னிங்சில் ஒரு நடிகை ஸ்கோர் பண்ணுவது மகா கடினம். குஷ்பு போனபின் ஹன்சியை குஷ்புவாக ரசிகர்கள் பார்த்ததால்தான் ஒரு ‘ஹன்சி பரபரப்பு’ ஏற்பட்டது. ஆனால் குஷ்பு மெலிவதற்கு முயற்சி செய்யவே இல்லை. எனவே ஹன்சிக்காவின் இரண்டாம் வருகை புஸ்வானமாகவும் ஆகிவிடலாம்!

“அனுஷ்கா ரொம்பவும் மெலிந்து விட்டாராமே உண்மையா?”
என். வருண்- கெக்கிராவை
 அனுஷ்கா திடீரென்று தனது உடல் எடையை குறைத்திருப்பது உண்மைதான். ஆனால் காரணம்தான் என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை பாகுபலி பிரபாஸ்சுடனான காதல் நட்பு முறிந்ததால் சோகத்தில் இருக்கிறாரோ…?
அனுஷ்காவின் எடை குறைந்த காரணத்தை கண்டுபிடிக்க சில பத்திரிகையாளர்கள் பிரபாஸிடம் கேட்டப்போது, தனக்கு எதுவும் தெரியாது என்று கோபமாக பதில் சொல்லியிருக்கிறார். அனுஷ்காவுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு கஷ்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது!

இந்தியன் 2 வெளிவருமா?
எம். யாஷினி- அட்டன்

பட்ஜெட் பிரச்சினை காரணமாக லைகா நிறுவனம் படத்தில் இருந்து வெளியேறிவிட்டது என்றும் அதனால் படம் கைவிடப்பட்டது என்றும் சில காலமாக அடுத்தடுத்து இந்தப் படம் பற்றிய செய்திகள் உலா வந்தன.
ஆனால் இந்தியன் படம் திட்டமிட்டப்படி விரைவில் தயாரிக்கப்படும் என்று ஷங்கர் தரப்பு சொல்கிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.
கமல் முழுநேர அரசியலில் இறங்குவதற்காக தமது சினிமா வாழ்க்கையை துறக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். தனது கடைசி படம் இந்தியன் 2 தான் என்று அவர் சொல்லியிருப்பதால் இந்தியன் 2 இப்போதைக்கு வெளியாவதற்கு வாய்ப்பில்லை.
கமல் இன்னும் இரண்டு படங்களில் நடித்த பிறகே இந்தியன் 2 வில் நடிப்பார். எனவே  இந்தியன் 2 இப்போதைக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

Sunday, June 16, 2019

சினிமானந்தா பதில்கள்

mani srikanthan
டிகை சகிலாவை நீங்கள் உரிமையோடு ‘நம்ம’ என்று சொன்னதிலிருந்தே புரிகிறது நீங்கள் சகிலாவின் தீவிர ரசிகர் என்று. வறுமையின் காரணமாக திரை உலகுக்கு வந்தவரை மலையாள பட உலகம் அவரை பலான நடிகையாக உருவாக்கியது. சகிலாவின் படங்கள் வெளியான போது மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி,மோகன்லால் படங்கள் இவரின் படங்களோடு நிற்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டன என்பது மறுக்க முடியாத உண்மை. மாயக்கா, காட்டு குதிரை, டியூசன் டீச்சர் என்று தமிழில் டப்  செய்யப்பட்ட  படங்கள் தமிழகத்திலும், நம்ம நாட்டிலும் சக்கை போடு போட்டதெல்லாம் தனி வரலாறு. பதின்ம வயது பையன்கள் முதற் கொண்டு பல்லுப்போன பெருசு வரை இந்த அக்காவின் அழகில் மயங்கித்தான் கிடந்தார்கள்.
பிறகு மலையாள திரையுலகில் யாரு செய்த சதியோ தெரியவில்லை, சகிலாவுக்கு வாய்ப்புகள் குறைந்து மீண்டும் பணக்கஷ்டத்துக்கு ஆளானார். அதன் பிறகு கேராளாவில் இருக்க முடியாமல் சென்னைக்கு வந்தார். அவருக்கு நெருக்கமான தோழியான திருநங்கை ரேவதியின் வீட்டில் தங்கினார்.
அவ்வப்போது தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் வந்தார். இவர் தோன்றிய காட்சிகளில் எல்லாம் சகிலாவை ‘அந்த’ மாதிரியான பார்வையிலேயே நகைச்சுவை என்ற பெயரில் கதை அமைக்கப்பட்டு சந்தானம், பராட்டா  சூரிகளால் கலாய்க்கப்பட்டதால் மனசு நொந்து போய் இருக்கிறாராம்.
‘எப்படியாவது ஒரு நல்ல குணசித்திர வேடத்தில் நடித்து தாய்க்குலங்களின் மனசை வெல்லணும்' என்பது அம்மணியின் இலட்சியம்! ஆனால் யாரும் வாய்ப்பு கொடுப்பதாக தெரியவில்லை.


தமிழ் சினிமாவின் திமிரு பிடிச்ச நடிகர் விஷால் என்று என் நண்பி சொல்கிறாள் உண்மையா?

எஸ்.ரேகா- மொரட்டுவை.

அப்படிதான் நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க, ஆனா அந்த மனுஷன் பாவம் அப்பாவி எல்லோரையும் மதிக்க தெரிஞ்சவர் கோபத்துல பொங்குவது உண்மைதான் ஆனா கோபம் இருக்கிற இடத்துலதானே குணம் இருக்கும்.னு உங்களுக்கு தெரியாதா…திமிரு பிடித்தவர் என்று தமிழ் திரையுலகில் தற்போது பேசப்படும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
mani srikanthan
மெரினாவில் நடித்த போது ஊடகங்களுக்கு தானே போன் போட்டு செய்திகளை வழங்கியவர் இப்போது வரும் எந்த தொலைபேசி அழைப்புகளையும் எடுப்பதில்லையாம். இதனால் சினிமா செய்தியாளர்கள் இவர் மீது ரொம்பவும் கடுப்பில் இருக்கிறார்களாம். படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்தி இன்று ‘15 கோடி கொடுத்தால்தான் நடிப்பேன்’னு சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்  என்று தயாரிப்பாளர்களும் இவர் மீது எரிச்சலில் இருக்கிறார்களாம்.


இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி யாஷிகா ஒரு புரட்சியாளராமே, உண்மையா?

என். சுமன்- வெள்ளவத்தை

mani srikanthan
அட, நீங்க வேற ‘கல்யாணத்துக்கு முன்னால பெண்களுக்கு கன்னித் திரை கிழிஞ்சிருந்தா தப்பேயில்லை அதையெல்லாம் ஆண்கள் டோன்ட்கேர் பொலிஸியா எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்’ என்று இவர் புரட்சி வசனம் பேசியதால் கெட்ட கெட்ட வார்த்தையால காதெல்லாம் கருகிற மாதிரி திட்றாய்ங்களாம். ஆனா யஷிகா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாமல் ‘தான் கருத்து சொல்வதற்கு தயங்கமாட்டேன். இன்னும் வெளிப்படையாக பேசுவேன்’ என்று சொல்லி வருவதால் ஒரு வேளை கருத்து கன்னியாக வருவாரோ…

Monday, December 24, 2018

அஜித் நயன்தாரா ஜோடியாக நடிப்பார்களா?

எஸ். சண்முகம், கொழும்பு 14.

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களிலே அஜித் நயன்தாரா ஜோடி சேர்ந்திருந்தார்களே. நீங்கள் பார்க்கவில்லையா?
உங்கள் ஆவலை பூர்த்தி செய்ய அஜித் - நயன் ஜோடி விஸ்வாசம் படத்தில் 4 ஆவது முறையாக நடித்துள்ளனர். இவருவம் கணவன் மனைவியாக அப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் பொங்கல் வரும் வரை காத்திருங்கள். அஜித் நயன் ஜோடியை மீண்டும் திரையில் காணலாம்.


தேவயானியின் தம்பி நகுலை காணவில்லையே!
சோமநாதன், கண்டி

‘செய்’ என்ற புதுப் படத்தில் நடிக்கிறார் நகுல். வித்தியாசமான கதைகளில் நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் என்கிறார் நகுல்.
‘நாக்க முக்க’ என்ற ஒரேயொரு பாடல் எனக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்திருக்கு என்று நன்றியோடு நினைவு கூரும் நகுல் ‘எரியும் கண்ணாடி’ என்ற புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.



சினிமாவில் நடிகைகள் உடுத்தும் உடைகளைத் தான் கல்லூரி மாணவிகள் வெளியில் உடுத்துகிறார்களாமே?
மஜாசபின் - கொழும்பு

மும்மையில் நடக்கும் பொது விழாக்களுக்கு நடிகைகள் எல்லை மீறிய கவர்ச்சி உடைகளில் வருகிறார்கள். இந்தி நடிகை மலைக்கா அரேரா அண்மையில் படவிழா ஒன்றுக்கு அணிந்து வந்த ஜீன்ஸ் எல்லை மிறும் வகையில் இருந்தது.
பொது இடங்களில் இவ்வாறு மோசமான உடை அணியலாமா என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நடிகை ரெஜினாவும் இதுபோல் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வந்து  நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஒரு தடவை!
(படத்திலிருப்பவர் ரெஜினா)

இத்தாலியில் நடந்த விராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமணத்தை மிஞ்சி விட்டதாமே பொலிவுட்டின் ரன்வீர்சிங்-தீபிகா படுகோன் திருமணம்?
கவிதா – பாதுக்க

கடந்த மாதம் வட இந்தியா முழுவதும் ‘தீப் வீர்’ திருமணம் பற்றித்தான் பேச்சு.
வெனிஸ் நகரம், பைசா கோபுரம் போன்ற அதிசயங்கள் லியனார்டோ டாவின்சி, மைக்கல்; எஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி, பீட்சா, பாஸ்தா உணவுகளின் பிறப்பிடம் என்பதால் இத்தாலிக்கு எப்போதுமே மவுசு உண்டு. அங்குள்ள லேக் கோமா உலகப் பிரசித்தம். அங்குதான் நடந்தது ‘தீப் வீர்’ திருமணம்.  அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தம் இங்குதான் நடைபெற்றதாம்.
மொத்தம் 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பொலிவுட்டில் இருந்து ஷாருக்கான், இயக்குநர் சஞ்சய் லீலா பன்கசாலி, நடன இயக்குநர் பாராகான் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு. மற்றவர்கள் பெங்களுரிலும், மும்பையிலும் நடந்த வரவேற்பு விழாவுக்குத்தான் அழைக்கப்பட்டிருந்தனர்.
பொலிவுட் வரலாற்றிலேயே ‘தீப் வீர்’ திருமண பட்ஜட் தான் மிகவும் பெரியதாம்.
மணமேடையை அலங்கரிக்க மட்டும் 12 பேர். தீபிகாவுக்கு பிடித்த லில்லி மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டருந்தது மணமேடை. தீபிகாவின் தாலிக்கு மட்டும் 20 லட்சம் ரூபா செலவாம். திருமணத்தின் போது தீபிகா அணிந்திருந்த மோதிரத்தின் விலை 2 கோடி ரூபாவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரச்சினை வரலாம் என்பதால்தான் இத்தாலியில் திருமணம் நடத்தப்பட்டதாம். என்ன பிரச்சினை?
‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு ராஜபுதன (ராஜ்புத்) இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தீபிகாவின் தலையை வெட்டுவோம் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் தான் இவர்களது திருமணம் இத்தாலியில் நடத்திருக்கிறது.