ஆர்.சிவராம்- மாங்குளம்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற திரைப்படம் தயாராகி வந்தது உண்மைதான், ஆனால் சில பணப் பிரச்சினைகள் காரணமாக அதன் தயாரிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது எம்.ஜி.ஆரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், ‘வந்தியதேவன்’ என்ற பெயரில் அனிமேஷனில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்துள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது.
சனீஷ்வர் அனிமேஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. இந்த படம் வெளியானால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.
இந்த வயசுல ரஜினிக்கு, தர்பார் தேவையா..?
கே. குணசேகரன்- இரத்தினபுரி.
இந்த கேள்வியை இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள்தான் கேட்க வேண்டும், ஏனென்னறால் ரொம்பவும் வயிறு எரிந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்.
70பது வயதில் வயதானவர் ஒரு மூலையில் உட்கார்ந்து, ஓய்வு எடுக்கணும், அல்லது முதியோர் இல்லத்தில் இருக்கணும் என்பதுதானே நம்மவர்களின் எண்ணமாக இருக்கிறது.
ஆனால் ரஜினி விடயத்தில் அது தலைகீழாகவே இருக்கிறது.
இன்றைய இளைய தலைமுறைகளை பின்னுக்குத் தள்ளி, ஆக்ஷன், காதல், நகைச்சுவை என்று பட்டையை கிளப்புறாரே…!
உண்மையை சொல்லணும்னா, ரஜினி ஒரு மேஜிக் மேன்தான். இந்த வயசுல இத்தினை ஆட்டமா என்று, நாம் ஆச்சரியப்பட்டு போகிறோம்.
தர்பார் படம் வெளியாகி 10 நாட்களில் இந்திய மதிப்பில் 200 கோடி வசூலை அள்ளியிருக்கிறது என்றால் சும்மாவா!, ரஜினி ஒரு பந்தயக் குதிரை இன்னும் சில காலத்துக்கு ஓடும்.
தமிழ் திரையுலகுக்கு ரஜினியின் அவசியமும், தேவையும் இருக்கிறது.
சமந்தாவுக்கு குழந்தை பிறந்து விட்டதா..?
கே. அர்ச்சனா- கொழும்பு-15
திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் எந்த அறிகுறியும் இல்லைன்னு அவரின் ரசிகர்கள் பலர் டுவிட்டரில் எழுதி வருகிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு குழந்தை இல்லை என்பதில் சமந்தாவும், நாகசைத்தன்யாவும் உறுதியாக இருக்கிறார்கள்.
‘குழந்தை பிறந்து விட்டால் நான் சினிமாவை விட்டு விலக வேண்டியிருக்கும். அதேவேளை நான் குழந்தையாக இருக்கும் போது, பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். அப்படியொரு சூழல் என் குழந்தைக்கு வந்து விடக் கூடாது.
ஆனாலும், வருகின்ற 2022-ம் ஆண்டு, ஓகஸ்ட் 7ந் திகதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.
நம்ம அன்னக்கிளி கோபிகா இப்போ என்ன செய்றாங்க..?
கே. சுகுமார்- அகலவத்தை.
ஆட்டோகிராஃப், எம் மகன் போன்ற படங்களில் நடித்த கோபிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது. ஆனால் அவரின் திருமணத்துக்கு பிறகு ஆள் காணமல் போய்விட்டார்.
மலையாள நடிகையான இவர், கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரில் 1985ல் பிறந்த இவர் சிறுவயதில் இருந்து பரதநாட்டியம் பயின்று வந்தார். சமூகவியலில் பட்டம் பெற்றார். விமானப் பணிப்பெண்ணாக ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டவருக்கு 2002ம் சினிமா உலகில் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு முன்னணி நடிகையாக உச்சம் தொட காத்திருந்தவர் காதல் வலையில் வீழ்தார்.
ஜூலை 17 - 2008ல் அகிலேஷ் என்றவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோபிகா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்🔴