மணி ஸ்ரீகாந்தன்.
சமீபத்தில் நாகசைத்தன்யா நாயகனாக நடித்து வெளிவந்த ‘லைலா ஓ லைலா’ படத்தின் அறிமுகப் பாடலான ‘இந்த லைப் நமக்கு ஒன்றே..’ என்ற பாடலை ஈழத்தைச் சேர்ந்த மீசை முளைக்காத சின்னப் பையன் மகேந்திரன் குலராஜ் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பற்றி கூகுல் தெய்வத்திடம் குறிக் கேட்டதில் அவர் தற்போது பிரான்சில் இருப்பது பதிலாக கிடைக்கவே அவரை வாட்சாப்பில் வலை விரித்துப் பிடித்தோம்…
“எனக்கு இப்போ வயசு 21, மீசையும் முளைத்து விட்டது…” என்று சிரித்தவர் தொடர்ந்தார்,
“என் குடும்பத்தில் யாருமே இலக்கிய துறையில் இல்லை, ஆனால் எனக்கு தமிழ் மொழி மீது ரொம்பவும் ஆர்வம். படித்து ஒரு தமிழ் வாத்தியாராக வரணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இலக்கிய உலகுக்கு திடீர்னு பிரவேசம் செய்து விட்டேன். இது ஒரு விபத்து மாதிரிதான் நடந்தது.
பண்ணாகம் மெய்கண்டான் தமிழ் வித்தியாலயத்தில் 6வது படித்துக் கொண்டிருக்கும் போது, படம் பார்த்து கவிதை எழுதணும் என்று ஒரு பாடம் நடந்தது. பொதுவாக கணிதம், தமிழ், விஞ்ஞானம் என்று எந்தப் பாடம் நடந்தாலும் நாங்கள் கொஞ்சம் பேர் வகுப்பில் பின்னாடிதான் இருப்போம்.
ஆனால் இந்தக் கவிதை பாடத்தில் நான் முதல் ஆளாக கவிதையை எழுதி ஆசிரியையிடம் கொடுத்து விடுவேன். கவிதையை படித்த அவர் என் கவிதையை மற்ற சக ஆசிரியர்களிடம் காட்டி ரொம்பவும் வியந்து பாராட்டியதால், என் புகழ் அந்தப் பள்ளி முழுவதும் காட்டுத் தீப்போல பற்றிக் கொண்டது.
அதன் பிறகு பெரிய வகுப்புகளில் கல்வி கற்கும் அண்ணாமார்களும் என்னிடம்தான் கவிதை எழுதி வாங்கி போட்டிகளில் பங்கு பற்றினார்கள். அப்படி அவர்கள் என்னிடம் கேட்டு எழுதி வாங்கிய பல கவிதைகள் போட்டிகளில் பரிசு வென்றதால் நான் அந்தப் பள்ளியில் சின்னக் கவிஞனாக உலா வரத் தொடங்கினேன்.
கவிதைகள் மீதான எனது ஆர்வம் இப்படிதான் வளரத் தொடங்கியது. அந்த நேரத்தில் நான் எழுதிய சில கவிதைகள் பாடசாலை சஞ்சிகைகளிலும் வெளியாகின.
11வது வயதில் எழுத தொடங்கிய எனது அனைத்து கவிதைகளையும் எல்லாவற்றையும் தொகுத்து ‘வைரம்’ என்ற பெயரில் ஒரு கவிதை நூலை எனது 13வது வயதில் வெளியிட்டேன்.
பண்ணாகம் பள்ளியின் தமிழ்த் தின விழாவில் எனது கவிதை நூல் முதல் முறையாக ஒரு அழகிய நூலாக வெளியானது.
இதற்கு பாடசாலை அதிபர், தமிழ் ஆசிரியர், பள்ளியின் நூலகர் உள்ளிட்டோர் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தார்கள். அதன் பிறகு எனது இரண்டாவது நூலாக ‘சீரழிந்து போகும் தமிழரின் பண்பாடு’ என்ற நூல் எனது 14வது வயதில் வெளியானது. அந்த நூலை அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சடகோபன் வெளியிட்டு வைத்தார்.” என்று தமது பசுமையான நினைவுகளை பூரிப்புடன் குலராஜ் சொல்லும்போதே அவர் முகத்தில் குதூகலம் தெரிந்தது.
கம்பியூட்டர் தொழிநுட்பவியல் படித்துக்கொண்டிருக்கும் மகேந்திரன் குலராஜின் படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறதாம்.
தமிழ் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டதும், குட்டிக் கவிஞர் குலராஜ் ரொம்பவும் உற்சாகமானார்…
“தமிழ்த் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு எனக்கு முகநூலில் தான் கிடைத்தது. எனது முகநூலில் நான் படைக்கும் கவிதைகளை கவனித்த இயக்குநர் ஏ.ஆர்.கே ராஜராஜன் எனக்கு ‘திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு தருகிறேன்’ என்று சொன்னப்போது நான் நம்பவில்லை. ஆனால் நிஜத்திலும் அது நடந்து விட்டது.
‘யாவும் காதலே’ என்ற படத்திற்குதான் நான் முதல் முதலில் பாடல் எழுதினேன் ஆனால் என் துரதிஷ்டம் அந்தப் படம் வெளியாகவில்லை. அதற்கு பிறகு இரண்டாவதாக எழுதிய ‘லைலா ஓ லைலா’ என்ற படத்தின் பாடல்தான் சமீபத்தில் வெளியானது. இதுவரையும் 18 படங்களில் பாடல் எழுதியிருக்கிறேன். அவற்றில் ஒரு சில படங்கள்தான் வெளியாகியிருக்கிறன.
இங்கே பிரான்சில் பெரிய மாஸ் நடிகர்களின் படங்களை மட்டுமே திரையிடுவதால் இன்னும் நான் பாடல் எழுதிய திரைப்படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இயக்குநர்கள் அனுப்பும் யூடியுப் லிங்க் உதவியுடன்தான் அந்த திரைப்படங்களை பார்க்கிறேன்.” என்றார்.
“உங்களின் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு பிரான்ஸ் ஒரு நல்ல களமாக இருக்கிறதா” என்றோம்,
“நிச்சயமாக இல்லை!” என்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்,
“கலை, இலக்கியம் என்று வரும்போது நாம் தமிழகத்தையோ அல்லது ஈழத்தையோதான் சார்ந்து இருக்க வேண்டும். இதுதான் யதார்த்த உண்மை.எனது படைப்புகள் இன்றும் தமிழகத்தில் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன.
“தமிழகத்தில் வெளியாகும் ‘நம்ம குடும்பம்’, ‘இனிய நந்தவனம்’ உள்ளிட்ட பல சஞ்சிகைகளில் எனது கவிதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது மூன்று புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று மணிமேகலை பிரசுரத்தில் வெளியாகவுள்ள எனது கவிதை புத்தகம். அந்தப் புத்தகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த மாதம் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அது வெளியிடப்படவுள்ளது.
அதுதவிர ‘உடல் விதைத்த பூமி’ என்ற ஒரு நாவலும் எழுதியிருக்கிறேன். அதை வெளியிடுவதற்கு ஒரு பதிபகத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகளை ஆவணப்படுத்தும் விதமாக அந்த நூல் அமைந்திருப்பதால் அதனை இலங்கையிலேயே வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படி எமது படைப்புகளுக்கு களமாக இருப்பது தமிழகமும், இலங்கையும் தான். இங்கே பிரான்சில் தமிழக்ததை சேர்ந்தவர்களால் கம்பன் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இருந்தாலும் அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை. தை பிறந்தால் பொங்கல் விழாவும், மாட்டுப் பொங்கலும் பொங்குவதோடு அவர்களின் பணி முடிந்துவிடுகிறது.
இது தவிர சூர்யா மியூசிக்கல் அக்காடமி என்ற குழுவில் நானும் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏப்பரல் மாதத்தில் கிராமிய நடனப் போட்டிகளை நடத்துகிறோம். இந்த ஆண்டு கிராமியப் பாடல் போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த அமைப்பு தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை தமிழர்களிடம் அதனை அடையாளம் காட்டி அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.
குறிப்பாக யாழ் இசைக் கருவியை ஈழத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்கின்றோம்.” என்று பெருமிதத்தோடு பேசும் குட்டிக் கவிஞரிடம்,
“கிராமிய நடன நிகழ்ச்சிகளை ஏப்ரல் மாதத்தில் நடத்துகிறீர்கள் என்றால் அது சித்திரை புத்தாண்டில் நடக்குமா?”
“அட நீங்க வேற, இந்த சித்திரையும், தீபாவளியும் தமிழர்களின் புத்தாண்டோ,கொண்டாட்ட நாளோ இல்லை. அவைகளை நாங்கள் கொண்டாடுவதும் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் தை முதல் நாள்தான் எங்களுக்கான புத்தாண்டு, அந்த நாளில்தான் நாங்கள் வாழ்த்துக்களை பறிமாறிக் கொள்கிறோம்.
இங்குள்ள மேயர் முதற் கொண்டு அரசியல்வாதிகள் வரை தை முதல் நாளில்தான் எங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள் அதனையே நாங்கள் வழக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.” என்றவரின் பேச்சில் ஒரு கெத்து தெரிந்தது.
“அப்போ நீங்கள் பகுத்தறிவுவாதியா?” என்று குலராஜை ரவுண்டு கட்டினோம்.
“நான் பெரியாரிஸ்ட் கிடையாது. பெரியாரின் சில கொள்கைகளை நான் முழுமையாக எதிர்க்கிறேன். குறிப்பாக தமிழை காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறிய கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதோடு அவர் ‘தமிழை 33 எழுத்துக்களுக்குள் அடக்க வேண்டும்’ என்று சொன்னது ஒரு மொழி அழிப்புக்கான அடித்தளமாக நான் பார்க்கிறேன்.
அதே வேளை பெண் விடுதலை, தீண்டாமை எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக பெரியாரை மதிக்கிறேன். இதே வேளை எங்கள் மண்ணில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தமிழ் வளர்த்தார், சைவம் வளர்த்தார் என்று சொல்லப்பட்டாலும் அவர் சாதி வெறியராகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை. கீழ் சாதியினர் கல்வி கற்கக் கூடாது என்பதிலும் அந்த மக்களை தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கியதும் அவர்தான். இதற்கான ஆதரமாக அவரின் சைவ வினாவிடை, மற்றும் பாலர் பாடசாலை நூல்களை பார்த்தாலே புரியும். இந்த விடயங்களுக்காக நாவலரை நான் எதிர்க்கிறேன்.
ஆரியக் கடவுள்களை எதிர்கிறேன், அவர்களை வெறுக்கிறேன்!” என்று கோபப்பட்டவரை இடைமறித்து “அப்போ முருகன் முப்பாட்டன் என்று சொல்கிறீர்களா?” என்றோம்.
“முருகனையும், சிவனையும் நான் தமிழ் அரசர்களாக பார்க்கிறேன். இதே வேளை ஆரியக் கடவுள்களின் கதைகளை படிக்கும் போது ரொம்பவும் விந்தையாக இருக்கிறது. இப்போ ஓரினச் சேர்க்கையைப் பற்றி பரவலாக பேசப்படுகிறது ஆனால் அந்தக் காலத்திலேயே சிவனுக்கும், விஷ்னுவுக்கும் பிறந்தவனாக ஐயனாhர் குறிப்பிடப்படுகிறார்.
சிவனுக்கும், நாரதருக்கும் பிறந்த அறுபது குழ்ந்தைகளின் பெயர்களைத்தான் சித்திரை புத்தாண்டுகளின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது.” என்று குலராஜ் எரிமலையாக வெடித்து ஓய்ந்தார்.
குடும்பத்தில் குலராஜ்தான் மூத்தவர். அவருக்கு பிறகு நான்கு தங்கைகள் இருக்கிறார்களாம். அவர்களில் இரண்டாவது தங்கைக்கு இலக்கியம் மீது ஆர்வம் இருக்கிறதாம்.
“என் தங்கை நான் படிக்கும் புத்தகங்களை வாசிப்பாள், இப்போது கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறாள்.
என் இலக்கிய ஆர்வத்துக்கு என் குடும்பத்தினர் முழுமையாக ஆதரவு தந்தார்கள் முக்கியமாக என் அம்மா எனக்கு பக்க பலமாக இருந்தார். ‘மீசை முளைக்காத வயதில் இவனுக்கு எதுக்கு கவிதையெல்லாம்’ என்று அண்டை வீட்டார்கள் கேலி பேசிய போதெல்லாம் என் அம்மா என் படைப்பிலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டு என்னை ரொம்பவும் ஊக்கப்படுத்தினார்.
கடந்த ஆண்டில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் ‘அங்கோர் தமிழ்ச் சங்கம்’ எனக்கு கவிஞருக்கான விருது வழங்கி கௌரவித்தது.” என்று குலராஜ் பெருமிதமாக பேசி முடித்தார்🔴

![]() |
| தந்தை பெரியார் |

Did you know there is a 12 word sentence you can say to your man... that will trigger deep emotions of love and instinctual attraction to you buried within his heart?
ReplyDeleteThat's because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, admire and protect you with his entire heart...
12 Words Will Trigger A Man's Desire Response
This instinct is so hardwired into a man's genetics that it will drive him to work harder than ever before to to be the best lover he can be.
Matter of fact, triggering this powerful instinct is absolutely binding to having the best ever relationship with your man that as soon as you send your man a "Secret Signal"...
...You will instantly find him open his soul and mind for you in a way he haven't experienced before and he will recognize you as the one and only woman in the world who has ever truly appealed to him.