சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக உதயம் இளைஞர் மன்றம் நடத்திய பெண்கள் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி 16ம் திகதி ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை காலை றைகம், மேற்பிரிவு, சரஸ்வதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிரிய, பிரதேச செயலக இளைஞர் மன்ற பொறுப்பதிகாரி சின்தக்க மகேஸ் கங்கந்த மற்றும் செயலகத்தின் இளைஞர் மன்ற தலைவர் நுவான் சுஜீவ ரணசிங்க, உதயம் இளைஞர் மன்றத்தின் தலைவர் ராமராஜ் மனோ உள்ளிட்ட மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹொரணை பிரதேச சபை உறுப்பினர்களான எம். நடராஜ், பொன். சரவணராஜா உள்ளிட்டோருடன் தோட்ட தலைவர்கள் பெருமாள் ராமராஜ், தம்பிராஜா பிரசாத் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஸ்ரீநாத் உள்ளிட்டோருடன் பெருந்திரளான இளைஞர், யுவதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு, வெற்றிக் கிண்ணமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment