தமிழில்-ராம்ஜி
புலத்சிங்கள ஹல்வத்துர பத்ரகாளி அம்மன் கோவிலின் தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதம் அப்பிரதேசத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணையை ஆரம்பித்த களுத்துறை மாவட்ட குற்றச் செயல் ஒழிப்பு பிரிவினால் கொலை நடந்த ஒரு சில நாட்களிலேயே அக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடிந்தது.
கொலையுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் பழைய இரும்பு சேகரிக்கும் நபரொருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸாருக்கு கொலையுடன் தொடர்படைய ஏனைய சந்தேக நபர்களை பிடிக்க முடிந்தது.
கோவிலின் பிரதம பூசாரியின் பேச்சைக் கேட்டே கோவில் தர்மகர்த்தாவை கொலை செய்ததாக சம்பந்தப்பட்ட பழைய இரும்பு வியாபாரி பொலிஸாரிடம் கூறியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட கோவில் பூசாரியை புலத்சிங்கள பொலிஸார் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.
பொலிஸார் கடுமையாக விசாரித்த போதும் தர்மகர்த்தா கொலையுடன் தான் சம்பந்தப்படவில்லை என்றே பூசாரி தொடர்ந்தும் கூறி வந்திருக்கிறார்.
எனினும் தர்மகர்த்தாவின் பிள்ளைகள் தமது தந்தையின் கொலை தொடர்பாக பூசாரியையே சந்தேகித்தனர்.
குறிப்பிட்ட பத்ரகாளி அம்மன் கோவிலில் சம்பந்தப்பட்ட பிரதம பூசாரியுடன் இரண்டு உதவி பூசகர்களும் இருந்தனர். கோவில் விடயங்களுக்கு இவர்கள் மூவருமே பொறுப்பாக இருந்தனர்.
தர்மகர்த்தா கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது உடலை கட்டிப் பிடித்தபடி பிரதம பூசாரி கதறி அழுதிருக்கிறார். இந்த அழுகை, மற்றவர்களிடம் அனுதாபத்தை தோற்றுவிப்பதற்கு பதில் சந்தேகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. தர்மகர்த்தாவின் பிள்ளைகளும் ஊர் மக்களும் இதுபற்றி பொலிஸாரிடம் கூறியதையடுத்து மூவரையும் பொலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.
கொலையுண்ட தர்மகர்த்தாவின் பெயர் சோமதாச. ஒன்பது பிள்ளைகளின் தந்தை. ஹல்வத்துர தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்த இவர் ஓய்வு பெற்றதும் பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவிலின் நிர்வாக வேலைகளை சோமதாச பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.
கோவில் நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொண்ட சோமதாச தனது சொந்தச் செலவில் கோவில் வேலைகளை செய்து வந்திருக்கிறார்.
கோவில் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர் வெள்ளவத்தையில் இருந்த ஒரு பூசாரிக்கு அதிக சம்பளம் மற்றும் வசதிகளை அளித்து ஹல்வத்துர பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஹல்வத்துற வந்த அந்த இளம் பூசாரி அந்த பிரதேசத்திலேயே திருமணமும் செய்து கொண்டார். திருமணச் செலவு முழுவதையும் சோமதாசவே பொறுப்பேற்றிருக்கிறார்.
கோவில் பூசாரிகள் மூவருக்குமான சாப்பாடு சோமதாசவின் வீட்டில் இருந்தே வழங்கப்பட்டிருக்கிறது. பூசாரிகள் மூவரும் கோவிலை நன்கு பராமரித்து பூஜை நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயற்பட்டதால் அப்பிரதேச மக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வரத் தொடங்கினர். இதனால் கோவிலுக்கு கிடைத்த ஆதாயமும் அதிகரித்தது.