Showing posts with label பலதும் பத்தும். Show all posts
Showing posts with label பலதும் பத்தும். Show all posts

Saturday, February 22, 2014

பல் போனால் மறதி வரும்

மறதி  நோய்

பற்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, கடைசியில், பல்லெல்லாம் போய் உள்ளவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் ஏற்படுகிறது. என்று அமெரிக்க கெண்டகி பல்கலைக்கழக நிபுணர்கள், தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வில் தெரியவந்த சில தகவல்கள்.
பற்கள் போனால் மறதி நோய் ஏற்படுகின்றது. வயதான காலத்தில், ஒன்பது பேரில் ஒருவருக்கு பற்களால் மறதி நோய் ஏற்படுகிறது.

பன்னிரண்டாண்டு காலத்தில் இவர்களின் பற்கள் பாதிப்பு நீடித்து, கடுமையான பின், மறதி நோய் ஏற்படுகிறது. 75 வயதுக்ளு மேல் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வருகிறது.

பற்களே இல்லாமல், அதிக பட்சம் ஒன்பது பற்கள் மட்டும் இருப்பவர்களுக்கு தான் டிமென்ஷியா நோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக பற்களை கொண்டவர்களுக்கு இந்த நோய் வராது என்று இல்லை. இவர்களை விட, பற்கள் போனவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பது தான் உண்மை.

அதனால், பற்களை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். அப்போது தான் வயதான காலத்தில், மறதி நோய் தாக்காது.

விரதம் உடலுக்கு நல்லது.

விரதம் இருப்பதிலும், கட்டுப்பாடு தேவை.


மத ரீதியாக சிலர் விரதம் இருக்கின்றார்கள். உடல் சுகாதாரத்தை முன்னிட்டும், சிலர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். மாதத்துக்கு ஒரு முறை, இப்படி சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது தான். குறிப்பாக, மாதத்துக்கு ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக, இருதய பாதிப்பு வராது. அவர்களுக்கு குடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாத நிலையில், பல சுகாதார நன்மைகள் இந்த விரதத்தால் கிடைக்கின்றன.

புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்தால் அதனால் இருதய பாதிப்பு குறைவது நன்றாக தெரிகிறது. சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டால் இருதய ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படும் அளவு குறைவதை தெளிவாக காண முடிகிறது.

இதே போலத்தான், மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களின் இருதய ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் அளவு இன்னும் வலுப்படுகிறது. விரதம் இருப்பதால், உடலில் பல உறுப்புகள் சீராக இயங்க முடிகின்றது. முழு சுத்திகரிப்பு நடக்கின்றது. அதன் மூலம் இருதயத்திலும்; சீரான ரத்த ஓட்டம் காணப்படுகின்றது.

விரதம் இருப்பதிலும், கட்டுப்பாடு தேவை. ரத்த சோகை உள்ளவர்கள் விரதம் இருக்கக்கூடாது. அதுபோல அடிக்கடி விரதம் இருப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு கேடாக அமையும் வாய்ப்பு உண்டு.

சிறிய வயதிலிருந்தே ஒபிசிட்டி என்று சொல்லப்படும், குண்டாகும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், நாற்பது வயதாய பின் இப்படி ஒருநாள் சாப்பிடாமல், விரதம் இருப்பது நல்லது தான்.

துளசி : தெரிந்ததும் தெரியாததும்

துளசிச்செடியின்  மகிமை


துளசிச்செடியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். மற்ற செடிகளைப்போலல்ல இந்த துளசி. மனிதனுக்கு மிகவும் பயன்தரவல்ல செடி. பல வழிகளில் பயன்தரும் இந்த துளசிச்செடியின் மகிமையை சற்றுக்கவனிப்போம்.

துளசிச்செடி வளர்த்துவந்தால் வீட்டில் விஷப்பூச்சிகள் அண்டாது. அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நச்சுத்தன்மையையைப்போக்கி சூழலைக்காக்கும் ஆற்றலுடையது துளசி. இதைவிட ஆச்சரியமானது என்னவென்றால், மழைக்காலத்தில் இடி விழாமல் (மின்னல் தாக்காமல்) வீட்டைப்பாதுகாப்பதில் துளசிச்செடி பெரும்பங்கு வகிப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள்.

தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை எடுத்து தேய்த்துவிட்டால் விஷம் உடலில் பரவாது. துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும். தேநீர் எதுவும் தேவையில்லை. புத்துணர்வு கிடைக்கும். தேநீர் எதுவும் தேவையில்லை.
புத்துணர்வுப்பானமாக மட்டுமல்லாது சனி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருத்துவ பானமாகவும் இது செயற்படுகின்றது.

பெண்களின் கருப்பையை பலப்படுத்தவும், ஆண்மைக்குறைபயைப்போக்கவும், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும் உதவுகிறது. துளசி அனல் தன்மை கொண்டதால் உடலிலுள்ள கிருமிகளை அழிக்கவல்லது. நமது முன்னோர்கள் குடிநீரை சுத்திகரிப்பதற்காக துளசி இலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

துளசியுடன் வேப்பிலைசேர்த்து அரைத்து பேன் தொல்லைக்கும் ஏன் முகத்திற்கும் கூட சிலர் இதைப்பயன்படுத்துவார்கள். முழுமையான தீர்வு கிடைக்கும். இந்தியாவில் காய்ந்த துளசி இலைகளை உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் வீட்டில் ஒரு துளசிச்செடியை நட்டு வளர்த்து வாருங்கள்.

நன்றி: வண்ண வானவில்

அண்ணாவின் சொல்லாற்றல்

நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும்...


அண்ணா முதல்வராக இருந்தபோது தமிழ் நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற ஆணையிட்டார். அதையொட்டி நடந்த விவாதத்தின்போது அண்ணாவை மடக்க உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும், நாகாக்க சோகாப்பார் சொல்லிழுக்குப்பட்டு என்று எழுதப்பட்டுள்ள குரள் யாருக்காக..? டிரைவருக்காகவா...?
கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா..?
இதற்கு என்ன பதில் சொன்னாலும் அண்ணா மாட்டிக்கொள்வார் என நினைத்தார் அந்த உறுப்பினர். டிரைவர் கண்டக்டருக்காக என்றால், தொழிலாளர்களின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டும். பொது மக்களுக்காக என்றால் மக்களின் கோபத்துக்கு உள்ளாக வேண்டும். இந்தக்கேள்விக்கு அண்ணா சொன்ன பதில், “அது நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த சமயம், விலைவாசி குறைந்துள்ளது என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக்கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே.. அது யார் சாதனை என்று கேட்டார்

அண்ணா அமைதியாக எழுந்து சொன்னார். அது புளியமரத்தின் சாதனை
மற்றொரு முறை திரு.விநாயகம் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை உயிரியல் பூங்காவில் சரியாக கவனிப்பதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகின்றதே..! என்று புகார் கூறினார்.
உடனே அண்ணா..! "சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.